நடந்து முடிந்த தேர்தலில் பிஜேபியின் பிரமாண்ட வெற்றியும்,  காங்கிரசின் தலை தூக்க முடியாத படு தோல்வியை தொடர்ந்து, முதல்கட்டமாக பிஜேபியின் கர்நாடகத்தின் மீது விழுந்தது. காங்கிரஸ் கூட்டணியில் முதல்வராக இருந்த குமாரசாமி ஆட்சி கவிழ்த்து மீனும் தென்னிந்தியாவை கால் தடத்தை பதித்தது பிஜேபி.

இதேபோல காங்கிரஸ் கூட்டணியிலும், இழுபறியில் இருக்கும் சில மாநிலங்களையும் தூக்க பிளான் போட்டு வருக்கும் நிலையில் தற்போது சிக்கியிருப்பது புதுவை, இங்கு காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி  கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. நாராயணசாமி முதல்வராக இருந்து வருகிறார். இங்கும் காங்கிரசை சேர்ந்த 2 முதல் 4  எம்.எல்.ஏக்களை பர்சேஸ் செய்யும் முயற்சியிலும்  எதிர் தரப்பு தீவிரம் காட்டி வருகிறதாம் பிஜேபி, கர்நாடகா பாணியில் பிஜேபி மேற்கொண்டு வருவதும்  நாராயணசாமியை நிலைகுலைய வைத்துள்ளதாம்.

இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக காங்கிரசின் மூத்த தலைகளில் முக்கிய  தலையான முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு கேஸை  தூசு தட்டி தூக்க பிளான் போட்டது. இந்த கேசில் 2 முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவரை விசாரிக்க சிபிது மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக  நேற்று சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்ற போது அவர் அங்கு இல்லை, 2 மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என சொல்லியும் சிதம்பரம் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் அதிகாரிகள் தேடி வந்தனர். 3 முறை சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்றும் சிபிஐ அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது. இதனையடுத்து சிதம்பரத்தை கைது செய்து, விசாரணை நடத்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் அவர் அங்கு இல்லை. அவரை போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. இதனால் சிதம்பரத்தின் வீட்டு வாசலில், தாங்கள் கொண்டு வந்த நோட்டீசை அதிகாரிகள் ஒட்டிவைத்து விட்டு சென்றனர். அதில், இன்னும் 2 மணி நேரத்தில் சிதம்பரம் நேரில் ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து சி.பி.ஐ., லுக்‍ அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. 2-வது நாளாக சிதம்பரம் இருக்கும் இடம் தெரியாததால், சி.பி.ஐ, அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. சிதம்பரத்தை கைது செய்வதில் சிபிஐ தீவிரம் காட்டி வருவதால், டெல்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிஜேபி தலைவர்களில் முக்கிய தலைவரான சுப்ரமணிய சுவாமியும் தனது ட்விட்டர் பக்கத்தில் நேர்மையற்ற சிதம்பரம் தலைமறைவாகி உள்ளார். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வலைவிரித்து தேடி வருகின்றன என குறிப்பிட்டுள்ளார். 

சிபிஐ அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கட்டம் கட்டப்படுது காங்கிரஸிங் நிலைகுலைய வைத்துள்ளதென்றே சொல்லலாம், இந்த பரபரப்பான சூழலில், பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கித்தில், அதீத தகுதியுடைய, மதிப்பிற்குரிய ராஜ்யசபா உறுப்பினரான சிதம்பரம், நிதியமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிற்காக நேர்மையுடன் பணியாற்றி உள்ளார். எந்த வித அச்சமும் இன்றி மத்திய அரசின் தோல்விகள் பற்றி உண்மையை பேசி வருகிறார். ஆனால் அவர் கூறும் உண்மைகளை ஏற்க முடியாமல் அவரை வேட்டையாட துடிப்பது வெட்கக் கேடானது. நாங்கள் சிதம்பரத்திற்காக துணை நிற்போம். உண்மைக்காக தொடர்ந்து போராடுவோம். சிதம்பரத்தை ஆதரிப்பதற்காக என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என கூறியுள்ளார்.

மோடியின் அதிரடி நேரடியாக மெயின் தலையை தூக்கும் இந்த ஆபரேஷனால், காங்கிரசின் முக்கிய தலைகள் சட்ட ரீதியாக தங்களை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்களாம், சிலர் தலைமறைவாகவும் பிளான் போட்டுள்ளார்களாம். அதேபோல, தேர்தலுக்கு முன்பாக காங்கிரசுக்கு தாவிய சிலர் மோடிக்கு ஐஸ் வைக்கும் வேளையிலும் இறங்கியுள்ளார்களாம். 

கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்த சத்ருகன்சின்ஹா, பாட்னா சாகிப் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மத்திய அமைச்சரான ரவிசங்கர் பிரசாத்திடம் தோல்வியடைந்த அவர், நேற்று முன்தினம், தனது டிவிட்டர் பக்கத்தில் மிகவும் தைரியமான பேச்சு மற்றும் சிந்தனையைத் தூண்டும் விதமாக சிறப்பான ஆய்வுகளுடன் கூடிய உரை என்றும் பாராட்டியுள்ளார். நாட்டின் முக்கியமான பிரச்சினைகளை குறித்து மிகச்சிறப்பான முறையில் பிரதமர் வெளிப்படுத்தியிருந்தார் ஓஹோ என புகழ்ந்து தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.