Asianet News TamilAsianet News Tamil

எங்களை காக்கும் கரங்களை ஏமாற்ற முடியாது! - நிச்சம் டாக்டர் ஆவேன் ''நர்கீஸ் மற்றும் ஹபீசா'' உறுதி!

அசாமைச் சேர்ந்த நர்கீஸ் மற்றும் ஹபீசா வறுமையின் பிடியில் இருந்தாலும், உற்றார் உறவினரின் உதவியால் கல்வியில் சிறந்து விளங்கி வருகின்றனர். வரும் காலத்தில் மருத்துவர் ஆவதே இலக்காகக்கொண்டு படித்து வருகின்றனர்.

We cannot deceive the arms that protect us! - Nargis, Hafiza said
Author
First Published May 6, 2023, 10:38 AM IST

அசாமின் தர்ராங் மாவட்டத்தில் ஒரு மௌலானாவின் மகளின் கல்வி கொடுப்பது என்பது, இந்திய முஸ்லீம் பெண்களின் துன்பங்களை தோற்கடிப்பதற்கும், அவர்களின் கனவுகளுக்கு சிறகுகளை கொடுப்பதும், ஒரே மாதிரியான கருத்துக்களை உடைப்பதற்கும் உள்ள உறுதியை வெளிப்படுத்தியுள்ளது.

மௌலானிவின் மகள் நர்கிஸ், கடந்த 2022ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளி தேர்வில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும், 12 மணி நேரத்திற்கும் மேலாக படித்து, மருத்துவராக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க கடுமையாக உழைத்து வருகிறார்.

தர்ராங் மாவட்டம், டல்கானில் உள்ள கச்சாரி பேட்டியில் வசிக்கும் சம்ஷர் அலி மற்றும் நசிரா கட்டூனின் இரண்டாவது மகள் நர்கிஸ். மிகவும் பின்தங்கிய மற்றும் தொலைதூரப் பகுதியில் பிறந்த நர்கிஸ், ஆரம்பக் கல்விக்காக தனது வீட்டிலிருந்து தினமும் 5-6 கிமீ நடந்து சென்று ஆற்றைக் கடந்து தனது பள்ளிக்குச் செல்ல வேண்டியிருந்தது.

நர்கிஸ், ஒரு மௌலானாவின் மகளாக இருப்பதால், அவரது கிராமத்தில் வசிப்பவர்கள் பலர், கல்விக்காக பள்ளிக்குச் செல்வதற்குப் பதிலாக, புனித குர்ஆன் உள்ளிட்ட இஸ்லாமிய பாடப்புத்தகங்களைக் கற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் நர்கிஸ் பள்ளிக்குச் செல்வதில் உறுதியாக இருந்தாள், அவளுடைய பெற்றோரும் நர்கிசை ஆதரித்தனர்.

We cannot deceive the arms that protect us! - Nargis, Hafiza said

நர்கிஸ் சுல்தானா, "2022-ல் மெட்ரிக் தேர்வு அல்லது பத்தாம் வகுப்பு இறுதிக்குத் தேர்வின் போது சிலிகுரியில் உள்ள ஆனந்தராம் பருவா அகாடமியில் படித்து வந்தார். தனது வறுமையான பொருளாதார பின்னணியை அறிந்த ஆசிரியர்கள் எனது கல்வியைத் தொடர உதவினார்கள் என நர்கிஸ் தெரிவித்துள்ளார்.

ஆனந்தராம் பருவா அகாடமியும் எந்த கட்டணமும் வசூலிக்காமல், நர்கிசுக்கு ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு வரை இலவச கல்வியை வழங்கியது. 2022 மெட்ரிக் தேர்வில் நர்கிஸ் சமூக அறிவியலில் 96 (100 மதிப்பெண்களுக்கு), கணிதத்தில் 95, அசாமியத்தில் 92, விருப்பப் பாடங்களில் 90, ஆங்கிலத்தில் 90, பொது அறிவியலில் 78 மதிப்பெண்கள் பெற்றார்.

தற்போது, நர்கிஸ் ஹோஜாயில் உள்ள அஜ்மல் கல்லூரியில் படித்து, மேல்நிலைத் தேர்வுக்காக அறிவியல் பாடத்தில் படித்து வருகிறார்.

தனது கல்வை தொடர்பாக நர்கிஸ் கூறுகையில், “எனது கல்வியைத் தொடர ஆசிரியர்கள் மற்றும் பலரும் எனக்குப் பண உதவி செய்துள்ளனர். அவர்கள் என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, நான் அவர்களை ஏமாற்ற முடியாது. நான் தினமும் 10 மணி நேரத்திற்கு மேல் படித்து வருகிறேன் என்றார். மேலும், நான் டாக்டர் ஆக வேண்டும். நான் மகளிர் மருத்துவ நிபுணராகி கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்ய முயற்சிப்பேன் என்றார்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கும், தனது மகளின் கல்வியைத் தொடர உதவியவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நசிரா கட்டூன், “நர்கிஸ் எதிர்காலத்தில் மனித குலத்துக்குச் சேவை செய்ய வெற்றிகரமான மருத்துவராக வருவார்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதேபோல், தர்ராங் மாவட்டத்தில் உள்ள டல்கானைச் சேர்ந்த மற்றொரு முஸ்லீம் மாணவி ஹபீசா பேகமும் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு வறுமை ஒரு தடையாக இருக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளார்.

We cannot deceive the arms that protect us! - Nargis, Hafiza said

இ-ரிக்ஷா ஓட்டுநர் ஹபீப் உல்லாவின் மகள் ஹபீசா, டல்கானில் உள்ள ஆதர்ஷ் ஜாதியா வித்யாலயாவில் படித்து மெட்ரிகுலேஷன் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ஹபீசா ஒரு டாக்டராகி, பின்னர் யூனியன் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios