Asianet News TamilAsianet News Tamil

பி.சி.ஓ.எஸ் பிரச்சனை கொண்ட பெண்களை குறிவைத்து தாக்கும் கொரோனா...கலங்கடிக்கும் ஆய்வு முடிவு..!!

பி.சி.ஓ.எஸ் நோயாளிகளில் கொரோனா தொற்று பாதிப்பின் விகிதம், பி.சி.ஓ.எஸ் ஆல் பாதிப்படையாதவர்களை விட இருமடங்காக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Vulnerable to covid
Author
Chennai, First Published Feb 12, 2022, 11:58 AM IST

இன்றைய பெரும்பாலான இளைய தலைமுறையிடம், .சி.ஓ.எஸ், ஒழுங்கற்ற மாதவிடாய், வயிற்று வலி, மனநிலை மாற்றங்கள், கருவுறாமை மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு போன்றவை இயல்பாகி உள்ளது. 

ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி என்பது பெண்களின் ஆரோக்கியத்திற்கும், மனமகிழ்ச்சிக்கும் ஒரு முக்கியக் காரணமாகும். ஒரு பொதுவான மாதவிடாய் சுழற்சிகாலம் என்பது 21 முதல் 35 நாட்கள் வரை என கருதப்படுகிறது. அப்படியான, வழக்கமான மாதவிடாயின் சுழற்சியின்போது, ஒரு பெண்ணின் உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் சுத்தம் செய்யப்படுவதால் உடல் ஆரோக்கியமாகி புத்துயிர் பெறுகிறது.

Vulnerable to covid

எனவே, ஒவ்வொரு பெண்ணும் ஆரோக்கியமான நல்வாழ்வுக்கு முறையான மாதவிடாய் சுழற்சியைக் கொண்டிருப்பது மிகவும் அவசியம். இல்லையென்றால், பி.சி.ஓ.எஸ் பிரச்சனைகள் உண்டாகும். இவை பெரும்பாலும் ஆண்ட்ரோஜன் அளவுகள் மற்றும் கருப்பையில் உள்ள சிறிய நுண்ணறைகளில் உருவாகும். அவை மாதவிடாயை சரிவர விடாமல் சீர்குலைக்கும்.

இந்நிலையில், பி.சி.ஓ.எஸ் நோயாளிகளில் கொரோனா தொற்று பாதிப்பின் விகிதம் பி.சி.ஓ.எஸ்-ஆல் பாதிக்காதோரை விட இருமடங்காக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பி.சி.ஓ.எஸ் கொண்ட பெண்களுக்கு தொற்றுகள் எளிதில் தாக்க அதிக வாய்ப்பு உள்ளதாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. சுகாதார அமைப்பில் பி.சி.ஓ.எஸ் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக, இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சோதனையில், பி.சி.ஓ.எஸ்-ஆல் பாதிக்கப்பட்ட பெண்கள், பி.சி.ஓ.எஸ் இல்லாத பெண்களிடம் இருந்து,வேறுபட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதை கண்டறிந்தனர். பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்களுக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய், இருதய நோய்கள் போன்றவைக்கு ஆளாகின்றனர். மேலும், கொரோனாவுக்கான அனைத்து ஆபத்தான காரணிகளும் கண்டறியப்பட்டன.

பி.சி.ஓ.எஸ் நோயாளிகளில் கொரோனா தொற்று பாதிப்பின் விகிதம் பி.சி.ஓ.எஸ்-ஆல் பாதிக்காதோரை விட இருமடங்காக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்கள் இடையே கொரோனா தொற்றின் ஆபத்து 51 சதவீதம் அதிகமாக இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இது  பி.சி.ஓ.எஸ் நோயாளிகளுக்கு மாரடைப்பு மற்றும் எண்டோமெட்ரியல் (endometrial cancer) புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. 

பி.சி.ஓ.எஸ் பிரச்சனையை சமாளிக்க மிகவும் பயனுள்ள வழி என்னவென்றால், உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்துதல், உடல் எடை குறைத்தல், ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மற்றும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது ஆகியவைதான். ஒவ்வொரு பெண்ணும் நல்ல உடல் ஆரோக்கியத்திற்காக, இதனை நிச்சயம் பின்பற்ற வேண்டும்.  

Vulnerable to covid

ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சிக்குப் போதுமான அளவு ஓய்வு எடுப்பதும் முக்கியம். குறிப்பாக, மாதவிடாய் நாட்களில் நீங்கள் அதிகப்படியான ஓய்வில் இருக்க வேண்டும். உங்கள் மாதவிடாய் சுழற்சியின்போது, சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல் மற்றும் தும்முவது போன்றவற்றை ஒருபோதும் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டாம். ஏனென்றால், கீழே செல்லும் உடல் ஆற்றலை நீங்கள் நிறுத்தினால், அது மாதவிடாய் சுழற்சியை எதிர்மறையாக பாதிக்கிறது. உங்கள் உணவில் இஞ்சி, கிராம்பு, குங்குமப்பூ, பெருஞ்சீரகம், சீரகம், இலவங்கப்பட்டை, கொத்தமல்லி, பூண்டு ஆகியவற்றைக் சேர்த்துக்கொள்ளலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios