Asianet News TamilAsianet News Tamil

விபரீதத்தில் சிக்கிய குழந்தை...பொறுப்பற்ற தாயின் செயலா...? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்...வைரல் வீடியோ...!!

தாயின் பொறுப்பற்ற செயலால், விபரீதத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பிய குழந்தையின் காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Unscrupulous behavior of mother hanging her child from balcony
Author
Chennai, First Published Feb 14, 2022, 11:58 AM IST

தாயின் பொறுப்பற்ற செயலால், விபரீதத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பிய குழந்தையின் காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. உலகின், எங்கோ ஒரு மூலையில் நெகிழ்ச்சியான, சில விசித்திரமான,வேடிக்கையான, சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. இன்றைய நவீன உலகில், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லாவற்றிக்கும் ஆன்லைனில் பதிவிடுவது, ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அவை சில சமயங்களில், நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், சிலவற்றை வேடிக்கையாக கடந்து செல்வோம். சில வீடியோ நமக்கு கோபத்தை தூண்டும், அப்படியான பொறுப்பற்ற தாய் ஒருவரின் செயல் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 

டெல்லியில், செக்டார் 82ல் உள்ள குடியிருப்பு பகுதியில் 10 வது தளத்தில் இருந்து பால்கனியில் ஒரு குழந்தை தொங்குவதைக் காட்டும் திகிலூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தை, அந்த குடியிருப்பின் எதிரில் வசிக்கும் ஒருவர் கேமராவில் படம் பிடித்துள்ளார். 

ஒன்பதாவது மாடியில் உள்ள பூட்டிய வீட்டின் பால்கனியில், பெண் ஒருவரின் சேலை விழுந்ததால், அந்த சேலையை எடுக்க தனது மகனை பெட்ஷீட்டால் கட்டி இறக்கி விடுகிறார். அந்த குழந்தை பெட்ஷீட்டின் உதவியுடன் ஏறுவதையும், கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில், அவரது தாயும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் குழந்தையை மேலே இழுப்பதையும் காணலாம். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து, நெட்டிசன்கள் கொந்தளித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பெண்ணுக்கு தனது குழஃந்தையை விட புடவை தானா முக்கியம் என கடுமையான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். மேலும், அவருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளர்.

இது தொடர்பாக, அக்கம் பக்கத்தினர் அந்தப் பெண்மணி, புடவை எடுப்பதற்கு யாருடைய உதவியையும் அல்லது ஆலோசனையையும் நாடவில்லை என்றும், அலுவகத்தையோ தொடர்புகொண்டிருக்க வேண்டும் என்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணுக்கு குடியுயிருப்பின் பராமரிப்பு அலுவலகம்  நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios