Asianet News TamilAsianet News Tamil

Migraine problem: உணவே மருந்து...ஒற்றை தலைவலிக்கு மருந்தாகும் 6 சூப்பர் உணவுகள்..!

உலக அளவில் பலரை பாதிக்கும் இரண்டாவது பெரிய உடல் நல பிரச்சனையாக ஒற்றைத் தலைவலி இருப்பதாக பல்வேறு மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Tips for instant migraine relief
Author
Chennai, First Published Jan 30, 2022, 2:02 PM IST

உலக அளவில் பலரை பாதிக்கும் இரண்டாவது பெரிய உடல் நல பிரச்சனையாக ஒற்றைத் தலைவலி இருப்பதாக பல்வேறு மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நம்முடைய அன்றாட பணிகளை கூட செய்ய முடியாத அளவுக்கு, ஒற்றை தலைவலி பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. சைனஸ், மனச்சோர்வு, அழுத்தம், மைக்ரேன் மற்றும் கிளஸ்டர் என தலைவலியில் பல வகை உள்ளது. தலைவலியில், நமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது ‘மைக்ரேன்’என அழைக்கப்படும் ஒற்றைத் தலைவலி தான். சில சமயங்களில் தலையே வெடித்து விடும் அளவிற்கு பாதிப்பு இருக்கும்.

Tips for instant migraine relief

மைக்ரேன் அல்லது ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள்:

தலைவலி, துர்நாற்றம், குமட்டல், வாந்தி, வயிற்று வலி போன்ற வயிறு கோளாறுகள், பசியின்மை, அதீத குளிர்ச்சி அல்லது வியர்வை, சருமம் வெளிர்தல், மங்கலான பார்வை மற்றும் காய்ச்சல் போன்றவை இதன் ஆகும்.

ஒற்றை தலைவலிக்கு தீர்வாகும் உணவுகள்!

உடலில் சீரான ரத்த ஓட்ட செயல்பாடு, மக்னீசியம், ஒமேகா 3, வைட்டமின் B2, தாதுக்கள் மற்றும் நுண் சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடலாம். கடல் மீனில் போதுமான அளவு ஒமேகா 3 உள்ளதால், உடலில் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. கடல் உணவில், குறிப்பாக மீன் உணவில் புரதம் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ள நிலையில், இது ஒற்றை தலைவலியைக் கட்டுப்படுத்த மிகவும் உதவும்.

இளநீர், நுங்கு, நீர்மோர், பானகம் போன்றவற்றை சாப்பிடலாம். ஆனால், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். முழுதானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள்,  நட்ஸ் ஆகியவற்றை அதிகம் சாப்பிடவேண்டும்.

மெக்னீசியம் நிறைந்த உணவு ஒற்றைத் தலைவலியைக் குறைக்க உதவுகிறது. ஆளி விதைகள், சியா விதைகள் மற்றும் முந்திரி போன்றவை மெக்னீசியம் நிறைந்த உணவு பொருளாகும். இவை ஒற்றைத் தலைவலி பிரச்சனையை படிப்படியாக குறைக்கும்.

Tips for instant migraine relief


  
மூலிகை தேநீர் சுவையில் நன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பல நன்மை பயக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. உதாரணமாக, இஞ்சி கலந்த லெமன் டீ மிகவும் பயனளிக்கும். புதினா இலை சேர்த்த தேநீர் சைனஸ் அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதனால், தலைவலி குறைகிறது.

ஆண்களை விட, பெண்களையே ஒற்றைத் தலைவலி அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. அடிப்படையில், அதிக ஈஸ்ட்ரோஜன் அளவுக்கும், குறைவான சோடியம் புரோட்டான் எக்ஸ்சேஞ்சர் அளவுக்கும் உள்ள தொடர்பே இந்த மாறுபாட்டுக்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே, பெண்கள் அதிக எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
 
ஒற்றை தலைவலி இருக்கும் சமயத்தில் செய்ய வேண்டியவை :

1. சற்று குளிர்ந்த, அமைதியான இருள் நிறைந்த அறையில் ஓய்வு எடுக்கலாம். 

2. தலைவலி உள்ள இடத்தில் குளிர்ந்த அல்லது சூடான பருத்தித் துணியைக்கொண்டு ஒற்றடம் கொடுக்கலாம்.

3. கழுத்துக்குப் பின்புறம் லேசான அழுத்தம் கொடுக்கும் வகையில் மசாஜ் செய்யலாம்.

Tips for instant migraine relief

மேற்கூறிய வழிமுறைகளை தவிர்த்து, வாழ்வியல் மாற்றங்களுக்கு பெரும் பங்கு வகிக்கின்றது. நீங்கள் யோக, மூச்சு பயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், முறையான உணவு பழக்கம், மன அழுத்தம் இல்லாமல் இருப்பது போன்றவை உங்களுக்கு உதவியாக இருக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios