Asianet News TamilAsianet News Tamil

Omicron new symptoms: ஒமைகிறான் தொற்றின் புதிய அறிகுறிகளில்... இருந்து உங்களை பாதுகாக்கும் 'கவச' உணவுகள்...!!

கடந்த, 2019 ஆம் ஆண்டு பரவ துவங்கிய கரோனா வைரஸ், குறிப்பிட்ட காலத்தில் பின் டெல்டா, டெல்டா பிளஸ், பீட்டா என்று உருமாற்றமடைந்து தாக்கி வருகின்றன. அதேபோன்று,  ஒமைகிறான் எண்ணிக்கை அதிகரிக்கும் வேகமும், அதன் அறிகுறிகளும் மாறி வருகின்றன. 

The best foods to eat for omicron new symptoms
Author
Chennai, First Published Jan 20, 2022, 1:02 PM IST

ஒட்டுமொத்த உலகமும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, கரோனா என்னும் கொடிய வைரஸ் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. என்ன தான் இந்த கரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், கரோனா வைரஸ் குறிப்பிட்ட காலத்தில் பின் டெல்டா, டெல்டா பிளஸ், பீட்டா என்று உருமாற்றமடைந்து தாக்கி வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு கரோனாவின் டெல்டா மாறுபாடு இந்தியாவில் இரண்டாம் அலையை ஏற்படுத்தி குறுகிய காலத்தில் பல உயிர்களைப் பறித்தது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு கொரோனாவின் ஒமைகிறான் மாறுபாடு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. 

The best foods to eat for omicron new symptoms

இந்த சூழலில் மற்றுமொரு புதிய வகை கரோனா வைரஸ் டெல்டாக்ரான்  என்ற பெயரில், சைப்ரஸ் நாட்டின் ஒரு சில பகுதிகளில் தென்படத் தொடங்கி உள்ளது. இதனால் மக்கள் மனதில் மீண்டும் அச்சம் அதிகரிக்கிறது.இந்த மாறுபாடு வெளிவரத் தொடங்கிய பிறகு, கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதே நேரத்தில், ஓமிக்ரானின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேகமும், அதன் அறிகுறிகளும் மாறி வருகின்றன. 

இதுவரை இருந்தது போல, இப்போது இருமல், காய்ச்சல் அல்லது சோர்வு மட்டுமே ஒமைகிறான் அறிகுறிகளாக இல்லை. சமீபத்திய தகவல்களின் படி, வயிற்றுப்போக்கின் அறிகுறிகள் ஒமைகிறான் நோயாளிகளிடம் காணப்படுகின்றன. ஒமைகிறான் மாறுபாட்டால் (Omicron Variant) தாக்கப்பட்ட உடனேயே வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆம், உங்களுக்கு வயிற்றில் கோளாறு மற்றும் வயிற்றுப்போக்கு இருந்தால், நீங்கள் ஒமைகிறான் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

தொற்றுக்கான அபாயம் இருந்து, உங்களுக்கு வயிற்றுப்போக்கும் இருந்தால், நீங்கள் என்னென்ன பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். உங்கள் உணவில் சிறிய மாற்றங்களுடன் உங்கள் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அவசியமாகும்.

சுரைக்காய்: 
 
வயிற்றுப்போக்குக்கு சுரைக்காய் ஒரு சிறந்த உணவாக இருக்கும். இதில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இது எளிதில் ஜீரணிக்கக்கூடியது. இதனுடன், இதில் கலோரிகள் குறைவாக உள்ளது மற்றும் இது வயிற்றில் லேசானது.

அதிகமாக தண்ணீர் குடிக்கவும்:

உங்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் போது நீரிழப்பு ஏற்படுவதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். ஆகையால் இந்த சமயத்தில் நீங்கள் வழக்கத்தை விட அதிக திரவங்களை குடிக்க வேண்டும். முக்கியமாக, அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். அதனால் உடலில் நீர் (Water) பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும்.

வறுத்த சீரகம்:

வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டால், நீங்கள் வறுத்த சீரகத்தையும் உட்கொள்ளலாம். இதனுடன் வேண்டுமானால் கருப்பு உப்பு சேர்த்து சாப்பிடலாம். அல்லது வெட்டிய பழங்களின் மேல் இட்டும் இதை உட்கொள்ளலாம். 

இஞ்சி:

The best foods to eat for omicron new symptoms

வயிற்றுப்போக்கைச் சமாளிப்பதில் உலர் இஞ்சி (Dry Ginger) மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே 3 கிராம் உலர் இஞ்சி மற்றும் நாட்டுச் சர்க்கரையை சம அளவு எடுத்து ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு பிரச்சனை நீங்கும்.

ஒமைக்ரான் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியம்:

மேலும், ஒமைக்கிரனின் அனைத்து அறிகுறிகளையும் கண்டறிந்து, பரிசோதனை செய்து, உரிய சிகிக்சை மேற்கொள்ள வேண்டும். தீவிரம் குறைவாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையில் வீட்டில் தனிமை படுத்தி கொள்ள வேண்டும். எனவே, இரண்டு தடுப்பூசி போடுங்கள், முக கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடிங்கள்.  

Follow Us:
Download App:
  • android
  • ios