கரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில், உடலில் ஆக்சிஜனை அதிகரிக்கும் உணவுகள் சிலவற்றை குறித்துப் இந்த பதிவில் பார்ப்போம்.

கரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில் ஒவ்வொரு வரும் தங்கள் உடல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பெரும்பாலும் நுரையீரல், சுவாசப்பாதைகளை கரோனா வைரஸ் தாக்குகிறது. நமது உடலில் இரும்புச் சத்துக் குறைபாடு இருந்தால், ஆக்சிஜன் அளவு குறையும் ஆபத்து உள்ளது. மேலும், ரத்த சிவப்பணுக்களில் ஆக்சிஜன் குறையும் போது, செயற்கை சுவாசம தேவைப்படுகிறது. சரியான நேரத்தில் செயற்கை சுவாசம் கொடுக்காவிட்டால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் உணவுகளைச் சாப்பிடுவது இப்போதைய சூழலில் அவசியம் ஆகும்.

 ஆக்சிஜனை அதிகரிக்கும் உணவுகள் சிலவற்றை குறித்துப் பார்ப்போம்.

தினமும் ஒரு கிராம்பு எடுத்துக் கொள்வது நம் உடலுக்கு அவசியம். நமது அன்றாட உணவுகளில் தினமும் சிறிதளவு கிராம்பு சேர்த்துக்கொள்வது நல்லது. 

 உடலில் நோய் எதிர்ப்பு சக்தியோடு, ஆக்சிஜன் அளவையும் அதிகரிக்கும் மஞ்சளை உட்கொள்ளலாம். அதேபோல, மஞ்சள், மிளகு சேர்த்து பால் குடிக்கலாம்.

பழங்களுள் அவகேடோ, பெர்ரிப் பழங்கள், கேரட், கனிந்த வாழைப்பழம், செலரி, பேரிச்சம் பழம் போன்றவற்றில் ஆக்ஸிஜன் அதிகம் உள்ளது. 

இந்த பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இந்த பழங்களில் உள்ள pH அளவு 8 ஆகும். பெர்ரிப் மற்றும் பேரிச்சம் பழங்களில் உள்ள பண்புகள், இரத்த அழுத்தத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளும்.

மேலும், ஒருவரது உடலில் ஆக்ஸிஜன் போதுமான அளவு இருந்தால், உடல் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பது போன்ற உணர்வைப் பெறுவோம். எலுமிச்சையில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கலாம். 

ஆனால் அது உடலினுள் செல்லும் போது காரத்தன்மையாக மாறும். மேலும் இதில் உள்ள எலக்ட்ரோலைட்டிக் பண்புகள் தான், இதை காரத்தன்மை நிறைந்த உணவாக்குகிறது. இந்த எலுமிச்சையை அன்றாடம் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஆக்ஸிஜன் அளவு சிறப்பாக இருக்கும்.

மாம்பழம், பார்லி, பப்பாளி, தர்பூசணி, சாத்துக்குடி இந்த உணவுகளும் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும். இந்த வகை உணவுகளில் pH அளவானது 8.5 உள்ளது. மற்றும் இது சிறுநீரகங்களை சுத்தம் செய்ய உதவியாக இருக்கும். இந்த பழங்களில் உள்ள வைட்டமின்கள் அதிகமாக உள்ளது.

 சமையலில் தேவைப்படும் இடங்களில் பட்டை சேர்ப்பது நல்லது. கறிவேப்பிலை, சீரகம், சோம்பு, பூண்டு, இஞ்சியில் ஆக்சிஜனை ஈர்க்கும் தன்மை அதிகம் உள்ளது. எனவே உணவில் போடப்படும் கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று சாப்பிடப் பழக வேண்டும்.

 துளசி இலைகளைச் சாப்பிடுவதாலும் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கலாம். நாள்தோறும் 10 துளசி இலைகளைப் பறித்து, சுத்தமாகக் கழுவிய பின் சாப்பிடலாம். 

செரிமானத்தின் போது காரத்தன்மையை உருவாக்கும். பப்பாளி குடலை சுத்தம் செய்து, குடலியக்கத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளும். கடல் உணவுகள் மற்றும் இறைச்சிகளில் புரோட்டீன், குறிப்பிட்ட பி வைட்டமின்கள், இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளது.

 பட்டாணி, பீன்ஸ், சோயா, கொண்டைக்கடலை, காராமணி ஆகியவையும் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும். பசலை கீரை, தர்பூசணி, முருங்கைக் கீரை, அவித்த வேர்க்கடலை, அன்னாசிப்பழம் ஆகியவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவும்.

அதேபோல நார்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.