Asianet News TamilAsianet News Tamil

Omicron new symptoms: கண்களை குறிவைத்து தாக்கும் ஒமிக்ரான்...இனி இந்த அறிகுறிகள் இருந்தால் அலெர்ட்டா இருங்கோ!!

கொரோனா காலத்தில், கண்களை பற்றிய இந்த விஷயங்களில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

Omicron virus new symptoms
Author
Chennai, First Published Feb 5, 2022, 12:53 PM IST

ஒமிக்ரான் தொற்று பாதிப்பின் அறிகுறிகள் லேசானதாக இருந்தாலும், வேகமாக பரவி வருகிறது என்று கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், இந்த வைரஸ் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஒமிக்ரான் தொற்றால் தாக்கப்பட்டவர்களுக்கு, புதிய புதிய அறிகுறிகளை வெளியிட்டு வருகிறது. அறிக்கைகளின்படி, முழு தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டவை ஒமைக்ரான் தொற்றின் பொதுவான அறிகுறியாகும்.

Omicron virus new symptoms

ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவகள் பலருக்கு சோர்வு, குமட்டல், தசை வலி, இருமல், காய்ச்சல் பசியின்மை, லேசான வெப்பநிலை, தொண்டை புண் மற்றும் தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் இவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 

மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல மருத்துவ நிறுவனங்கள், பொதுவான குளிர் காய்ச்சல் (Fever) போன்ற அறிகுறிகளுடன் ஏதேனும் விசித்திரமான அறிகுறிகளும் இருந்தால், அவர்கள் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.  ஒமிக்ரான்  மாறுபாட்டில் மிகவும் தீவிரமான விஷயம் என்னவென்றால், அது வேகமாக பரவி வருகிறது. மேலும் அதன் அறிகுறிகளும் அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் உடலின் பல பாகங்களை பாதித்து வருவதாக அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. ஒமிக்ரான் கான்ஜுன்க்டிவிடிஸ் (Conjunctivitis) போன்ற ஒரு நிலையையும் ஏற்படுத்தும் என்று ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

கான்ஜுன்க்டிவிடிஸ் எப்படி ஏற்படுகிறது:

கான்ஜுன்க்டிவிடிஸ், அதாவது கண்கள் சிவந்து போகும் பிரச்சனை, உங்கள் கண் இமைகளின் உட்புறத்தில் இருக்கும் கான்ஜுன்டிவா எனப்படும் மெல்லிய சவ்வில் ஏற்படும் வீக்கம் ஆகும். CDC மற்றும் WHO இதை ஓமிக்ரான் மாறுபாட்டின் அறிகுறியாக (Omicron Symptom) இன்னும் கருதவில்லை. ஆனால் இந்த அறிகுறி பல நோயாளிகளில் காணப்படுகிறது. பீட்டா மற்றும் டெல்டா வகைகளை விட ஒமிக்ரான் மாறுபாடு ACE-2 ஏற்பிகளுடன் பிணைக்கும் அதிகத் திறனைக் கொண்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே கான்ஜுன்க்டிவிடிஸ்ஒமிக்ரானின் அறிகுறியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Omicron virus new symptoms

ஒமிக்ரான் கண்களை குறிவைப்பது எப்படி?

வெண்படல அழற்சியின் அறிகுறிகள் அதாவது இளஞ்சிவப்பு கண்கள் கொரோனா நோயாளிகளிடம் காணப்படுகின்றன. இருப்பினும், வேறு பல காரணிகளும் இதற்கு காரணமாக இருக்கலாம். எனினும், இந்த அறிகுறி ஒமிக்ரான் நோயாளிகளிடமும் காணப்படக்கூடும் என்ற சந்தேகம் இருப்பதால், இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வது நல்லதாகும். 

கண்களில் காணப்படும் அறிகுறிகள் இவைகள் தான்:

கொரோனா காலத்தில், கண்களில் தெரியும் எந்த அறிகுறிகளையும் புறக்கணிக்கக்கூடாது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஒமிக்ரான் மிக வேகமாக மாறுகிறது, அதன் அறிகுறிகளும் மாறி வருகின்றன. கண்கள் தொடர்பான அறிகுறிகள் பல நோயாளிகளிடம் காணப்படுகின்றன. கண்கள் சிவந்து போதல், கண்களில் எரிச்சல் மற்றும் நீர் வடிதல், கண்களில் வலி, கண்களில் வீக்கம் போன்ற அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், நீங்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

Omicron virus new symptoms

உங்களுக்கு கான்ஜுன்க்டிவிடிஸ் இருந்தால் என்ன செய்ய வேண்டும்:

கான்ஜுன்க்டிவிடிஸ் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், அடிக்கடி கண்களைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், சுத்தமான துண்டுகளை தினமும் பயன்படுத்த வேண்டும். யாருடனும் துண்டுகளை பகிர்ந்து கொள்ளக்கூடாது, உங்கள் தலையணை உறைகளை அடிக்கடி அடிக்கடி மாற்ற வேண்டும்.  இது தவிர எந்த விதமான கண் மையையும் கண்களில் தடவக்கூடாது. 

Follow Us:
Download App:
  • android
  • ios