Asianet News TamilAsianet News Tamil

Omicron new symptoms: ஒமிக்ரான் சப்வேரியன்ட்டின் புதிய இரண்டு அறிகுறிகள்...புதிய ஆய்வில் வெளிவந்த உண்மை..!!

ஒமிக்ரான் சப்வேரியன்ட்டின் புதிய இரண்டு அறிகுறிகள், ஒமைக்ரானை காட்டிலும் அதிகம் பரவும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது.

Omicron sub variant new symptoms
Author
Chennai, First Published Feb 14, 2022, 12:57 PM IST

ஒமிக்ரான் சப்வேரியன்ட்டின் புதிய இரண்டு அறிகுறிகள்,  ஒமைக்ரானை காட்டிலும் அதிகம் பரவும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது.

ஒமிக்ரான் தொற்று பாதிப்பின் அறிகுறிகள் லேசானதாக இருந்தாலும், வேகமாக பரவி வருகிறது என்று கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், இந்த வைரஸ் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஒமிக்ரான் தொற்றால் தாக்கப்பட்டவர்களுக்கு, புதிய அறிகுறிகளை வெளியிட்டு வருகிறது. அறிக்கைகளின்படி, முழு தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டவை ஒமைக்ரான் தொற்றின் பொதுவான அறிகுறியாகும்.

Omicron sub variant new symptoms

உலகமே கொரோனா என்கின்ற கொடிய நோய்க்கு எதிராக போராடி மீண்டு வரும் நிலையில், நம் பாதுகாப்பாக இருப்பது அவசியம். சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா என்கிற கொடிய நோய், டெல்டா, டெல்டா பிளஸ்,  ஒமிக்ரான் என்று பல்வேறு விதங்களில் உருமாறி, உலகின் பல்வேறு நாடுகளில் பரவி பல உயிர்களைக் காவு வாங்கியுள்ளது. இதில், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் வேரியன்ட் தலை தூக்க துவங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34,113 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 3.19 % ஆகவும் வாராந்திர விகிதம் 3.99% ஆகவும் குறைந்துள்ளது.

கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியாவில் முதல் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட இந்த வகை கொரோனா வைரஸ் தனது தாக்கத்தைப் படிப்படியாக அதிகரித்தது. இதனால், நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சத்தை எட்டியது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் அமலுக்கு வந்தன.  இதனிடயே கொரோனா தொற்று பிப்ரவரி தொடங்கியதிலிருந்து மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. இதனால் பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இருப்பினும், தற்போது பரவ துவங்கியுள்ள ஸ்டெல்த் ஒமைக்ரான் (BA.2) என்று அழைக்கப்படும் இந்த ஒமைக்ரான் சப்வேரியன்ட்டானது ஒமைக்ரானை காட்டிலும் அதிகம் பரவும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது. எனவே, இது குறித்து உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதற்கிடையில், ஒமிக்ரான் மற்றும் அதன் சப்வேரியன்ட் பற்றிய புதிய அறிகுறிகள் மற்றும் விளைவுகள் பற்றி நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

Omicron sub variant new symptoms

 ஒமிக்ரான் சப்வேரியன்ட் பிற அறிகுறிகள்:

இந்த ஒமிக்ரான் சப்வேரியன்ட் அதன் தாய் வேரியன்ட்டான ஒமிக்ரானை போலவே லேசான அறிகுறிகளையே ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. ஸ்டெல்த்  ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவகள் பலருக்கு சோர்வு, குமட்டல், தசை வலி, இருமல், காய்ச்சல் பசியின்மை, லேசான வெப்பநிலை, தொண்டை புண் மற்றும் தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். இவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 

Omicron sub variant new symptoms

தற்போது வெளியான புதிய அறிக்கையின்படி, மயக்கம் அல்லது தலைச்சுற்றல் என்பது stealth-ஆல் ஏற்படும் நோய்த்தொற்றின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும். ஒருவருக்கு தலைச்சுற்றல் ஏற்படுவதற்கு வேறு காரணங்கள் இருந்தாலும் இதே நிலை தொடர்ந்தால் ஒருவர் மருத்துவ நிபுணரின் ஆலோசனையை நாட வேண்டும். மேலும், ஒமிக்ரான் சப்வேரியன்ட் பாதிப்புகளில் திடீர் சரிவைக் கண்ட நாடுகளில் புதிய தொற்று எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணமாக இருக்கிறதா என்று ஆராய்ச்சிகள் நடைபெறுவதாகவும் கூறி உள்ளார். எவ்வாறாயினும் BA.1-ஐ விட BA.2 1.5 மடங்கு அதிகமாக பரவும் தன்மை கொண்டது என்றார். 


 

Follow Us:
Download App:
  • android
  • ios