Asianet News TamilAsianet News Tamil

Omicran: ஒமிக்ரான் 'வேரியன்ட்' BA.2 மனித குலத்திற்கு அடுத்த அச்சுறுத்தலா? நிபுணர்கள் சொல்லும் புதிய தகவல்...!!

டென்மார்க் நாட்டில் தற்போது உலகம் முழுவதிலும் பரவி வரும் ஒமிக்ரானை  (BA.1) விட, அதிலிருந்து உருமாறிய (BA.2) ஒமிக்ரான் வேரியன்ட் மிக வேகமாகப் பரவுவதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தகவல்  தெரிவித்துள்ளது.

Omicran new variant is another threat to human life?
Author
Chennai, First Published Feb 2, 2022, 12:10 PM IST

டென்மார்க் நாட்டில் தற்போது உலகம் முழுவதிலும் பரவி வரும் ஒமிக்ரானை  (BA.1) விட, அதிலிருந்து உருமாறிய (BA.2) ஒமிக்ரான் வேரியன்ட் மிக வேகமாகப் பரவுவதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தகவல்  தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதிலும் பரவி வரும் ஒமிக்ரானால் (BA.1) வைரஸ், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் குறைய துவங்கியுள்ளது. வார இறுதிப் பொதுமுடக்கம் உள்ளிட்ட பலதரப்பட்ட கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்பிவரும் நிலையில், புதிய ஒமிக்ரான் வேரியன்ட் ‘(BA. 2)  வைரஸ் தொற்று எண்ணிக்கையின் பாதிப்பு அதிகமாக உள்ளது என தெரிவித்துள்ளனர். இவை மக்களிடையே மீண்டும் அச்சத்தை அதிகரித்துள்ளது. இது தொடர்பான தகவலை டென்மார்க் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

Omicran new variant is another threat to human life?

 சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா என்கிற கொடிய நோய், டெல்டா, டெல்டா பிளஸ்,  ஒமிக்ரான் என்று பல்வேறு விதங்களில் உருமாறி, உலகின் பல்வேறு நாடுகளில் பரவி பல உயிர்களைக் காவு வாங்கியுள்ளது.  இதனால், கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வருகிறது. கொரோனாவின் புதிய மாறுபாடு Omicron, அதிக அழிவை ஏற்படுத்தவில்லை, வைரஸ் முடிவுக்கு வரப்போகிறது என்று நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள், வைரஸின் புதிய மாறுபாடு கவலைகளை அதிகரிக்க செய்கிறது. 

கோபன்ஹேகன் பல்கலைக்கழகம் மற்றும் டேனிஷ் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்த விஞ்ஞானிகள் தலைமையிலான குழு, பிற நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டது. 

அப்போது, ஒமிக்ரான் வைரஸின் புதிய துணை மாறுபாடு BA.1, ஒமிக்ரானை விட 33 சதவீதம் வேகமாக பரவுகிறது என்று  கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய மாறுபாடான  BA.2 தொற்று டென்மார்க்கில் நோயால் பாதிக்கப்பட்டவர்களால் மற்றவர்களுக்கு வேகமாக பரவியது. இருப்பினும்,  முதல் கட்ட ஆய்வு மட்டுமே சமர்பிக்கப்பட்டுள்ளது.

 தடுப்பூசியில்  BA.2 வின் செயல்பாடு:

ஆய்வின் முடிவில் , BA.2 இயற்கையாக நிகழும் BA.1 திரிபை விட அதிகமாக பரவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது, இது தொற்றுக்கு எதிரான தடுப்பூசியின் செயல்திறனைக் குறைக்கிறது.

 அதேபோல் மருத்துவமனையில் சேர்க்கக்கூடிய அளவிற்கு இந்த உருமாறிய ஒமிக்ரானால் எந்த பாதிப்பும் இல்லை எனவும்,இந்த நோய்த்தொற்று தடுப்பூசி போடாதவர்களை எளிதாகத் தாக்கும் அபாயம் உள்ளதாகவும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் வைரஸ் தொற்று தாக்கலாம், எனவும் தெரிவித்துள்ளனர்.

உருமாறிய இந்த  BA.2ஒமிக்ரான், மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது டென்மார்க்கில் மட்டும் அதிக அளவில் பரவியுள்ளது. ஆபத்தின் அளவு குறைவாக இருந்தாலும், தொற்றுப் பரவும் வேகம் அதிகமாக உள்ளதால் தொற்றுநோயின் காலம் இன்னும் நீடிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Omicran new variant is another threat to human life?

மேலும், உலக சுகாதார அமைப்பு, ஐரோப்பிய யூனியன் நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வர இருக்கிறது எனத் தெரிவித்தன. இந்த நிலையில்தான் தென்ஆப்பிரிக்காவில் MERS-Cov என்ற நியோகோவ் எனும் புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் 3-ல் ஒருவரை கொல்லும் கொடிய தன்மை கொண்டது என சீனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இருப்பினும், இது மனிதர்களிடம் பரவும் வாய்ப்பு குறைவு என்ற செய்தி ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios