Asianet News TamilAsianet News Tamil

Maha Shivaratri things to avoid: மகா சிவராத்திரி நாளான இன்று இந்த தவறுகளை..மறந்தும் கூட செய்யாதீர்கள்..!

Maha Shivaratri things to avoid: மகாசிவராத்திரி தினமான இன்று  எதை நாம் செய்யலாம், எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

Maha Shivaratri things to avoid
Author
Chennai, First Published Mar 1, 2022, 12:27 PM IST

நாடு முழுவதும் மகாசிவராத்திரி இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மகாசிவராத்திரி தினமான இன்று  எதை நாம் செய்யலாம், எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்துக்களின் விரத தினங்களில் பல வகைகள் இருந்தாலும், குறிப்பாக வைணவ பக்தர்களின் வைகுண்ட ஏகாதாசி விரதமும், சைவ பக்தர்களின் மகாசிவராத்திரி விரதமும் முக்கியமான தினங்களாகும்.

Maha Shivaratri things to avoid

இந்நாளில் மறந்தும் கூட இந்த தவறுகளை செய்யாதீர்கள்.

வனுக்கு துளசி: 

செடியை அர்பணிக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் சொல்லப்படுவதுண்டு. துளசியின் மணாளனான ஜலந்தர் எனும் அரக்கனை சிவபெருமான் வதைத்த காரணத்தால். சிவபெருமானை தன்னுடைய இலைகள் கொண்டு வழிபடக்கூடாது துளசி சபித்தாக புராணங்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க...Maha Shivaratri Fasting: மகாசிவராத்திரி விரதமுறைகள் தெரியுமா...? விரதமிருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை.?

Maha Shivaratri things to avoid

சிவ வழிபாட்டில் தேங்காய் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை:

சிவபெருமான் சங்கச்சுடு என்ற அரக்கனைக் கொன்றார். அன்றிலிருந்து சங்கு அதே அரக்கனின் அடையாளமாகக் கருதப்படுகிறது. எனவே சங்கரரை வழிபடும்போது சங்கு ஊதக்கூடாது. தண்ணீரைப் பிரதிஷ்டை செய்யக்கூடாது.

Maha Shivaratri things to avoid

அன்னதானம் என்ற பெயரில் குளிரபானம்: 

மகா நாளில் அன்னதானம் கொடுப்பது புண்ணியம் தான். ஆனால், சிலர்  கேசரி, தயிர் சாதம், சாம்பார் சாதம், குளிர்பானம் போன்றவற்றை புண்ணியம் என்று நினைத்துக்கொண்டு, தயார் செய்து, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் கொடுப்பதுண்டு.மகாசிவராத்திரி தினத்தன்று கோயில், வீடு என எங்குமே அன்னதானம் என்ற பெயரில் எதையும் கொடுக்கக்கூடாது. அப்படி செய்தால் சிவராத்திரி விரதம் இருப்பதன் பலனே கெட்டுவிடும்.

Maha Shivaratri things to avoid

சிவ வழிபாட்டில் குங்குமம் அதிகம் பயன்படுத்தப்படுத்தக் கூடாது,சிவப்பு மலர்கள் கடவுளால் சபிக்கப்பட்டவை என்பது நம்பிக்கை. அதனால்தான் சிவபெருமானுக்கு சிவப்பு மலர்களை அர்ப்பணிக்கக்கூடாது. 

மேலும் படிக்க...Maha Shivaratri Pooja: மகாசிவராத்திரி நாளில்...பூஜை செய்து சிவனின் அளவற்ற அருளை பெறுவது எப்படி?

உடைந்த அரிசி:

உடைந்த அரிசியை சிவபெருமானுக்கு ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. அதுபோல அரிசி நன்கு தூய்மையாகவும் இருக்க வேண்டும்.

Maha Shivaratri things to avoid

கோயில்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே உபவாசம் இருப்பவர்கள் சிவராத்திரி நாளில் பக்திப் படம் பார்க்கலாம் என்று தவறுதலாக நினைத்துக்கொண்டு பக்திப்படங்களையும் பக்திப் பாடல்களையும் பார்த்து ரசிப்பதுண்டு. இதுவும் தவறான அணுகுமுறைதான். இதையும் நாம் தவிர்க்க வேண்டியது அவசியம்.

கோயில்களுக்கு செல்பவர்கள் பொழுது போக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு உட்கார்ந்துகொண்டு நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை கச்சேரி நடத்துவது கிண்டலடிப்பது போன்ற தவறான செயல்களைத் தவிர்ப்பது நல்லது. எனவே, மேற்சொன்ன விஷயங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

மேலும் படிக்க .....Maha Shivaratri mantra: சிவசிவ என்றிட தீவினை தீருமாம்...மகா சிவராத்திரியில் உச்சரிக்க வேண்டிய சிவ மந்திரங்கள்!

Follow Us:
Download App:
  • android
  • ios