Asianet News TamilAsianet News Tamil

Lata Mangeshkar Story: ''வளையோசை கலகலவென'' பாடல்...பாடியவரின் வாழ்க்கை வரலாறு தெரியுமா...?

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல்களை பாடியுள்ள லதா மங்கேஷ்கர், இன்று கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
 

Lata Mangeshkar History
Author
Chennai, First Published Feb 6, 2022, 12:22 PM IST

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல்களை பாடியுள்ள லதா மங்கேஷ்கர், இன்று கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவின் 'இசைக்குயில் ’என அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் , பல கோடி ரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கிறார். இவர் 1929-ம் ஆண்டு, செப்டம்பர் 28-ம் தேதி, மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பிறந்தார். தந்தை மராத்தி , தாய் குஜராத்தி. 

வறுமையில் வாடிய லதா மங்கேஷ்கர்:

1942 ஆம் ஆண்டு சினிமாவில் பாடத் தொடங்கிய லதா மங்கேஷ்கர், முதன் முதலாக கிதி ஹசால் என்ற மராத்தி பாடலைப் பாடினார். அதே ஆண்டில் அவருடைய தந்தையும் இறந்து விடவே, குடும்பம் வறுமையில் வாடியது. அந்த நேரத்தில் இசையமைப்பாளர் குலாம் ஹைதர் என்பவர் மஜ்பூர் என்ற திரைப்படத்தில் பாட வாய்ப்பு அளித்தார். இது ல லதா மங்கேஷ்கரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

தமிழில் அறிமுகம்:

1955-ம் ஆண்டு திலீப் குமாரின் நடிப்பில் ‘உரன் கடோலா’ என்ற இந்திப் படம் வெளியானது. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த 9 பாடல்களையும், லதா மங்கேஷ்கரும், முகமது ரஃபியும் பாடியிருந்தார்கள். பின்னர் இந்தப் படம் ‘வான ரதம்’ என்ற டைட்டிலில் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது. இதில் ’எந்தன் கண்ணாளன்’ பாடலை கம்பதாசன் வரிகளில் பாடினார் லதா.  

Lata Mangeshkar History

தமிழுக்கு அழைத்து வந்த இளையராஜா:
 
1988-ல், இளையராஜா இசையில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான, சத்யா படத்தில் இடம்பெற்றிருக்கும் வளையோசை பாடலை, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பாடினார். இன்றளவும் இந்தப் பாடல் பலரின் ஃபேவரிட் லிஸ்டில் உள்ளது.

1956-ம் ஆண்டிற்குப் பிறகு வேறெந்த தமிழ் படங்களிலும் பாடாமல் இருந்தார் லதா மங்கேஷ்கர். அவரை 1987-ம் ஆண்டு பிரபு நடித்த ‘ஆனந்த்’ என்ற படத்திற்காக மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தார் இளையராஜா. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஆராரோ ஆராரோ’என்ற பாடலைப் பாடினார் லதா. ஆக, இது தான் அவர் நேரடியாகப் பாடிய முதல் தமிழ் பட பாடல். பின்பு அதே 1988-ல் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘என் ஜீவன் பாடுது’ ன்ற படத்தில் இடம்பெற்றிருந்த ‘எங்கிருந்தோ அழைக்கும்’ என்ற பாடலை, பாடகர் மனோவுடன் இணைந்து டூயட்டாகவும், சோலோவாகவும் பாடிருந்தார். இந்தப் படத்திற்கும் இளையராஜா தான் இசை. 

அதன்பிறகு, 2006-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ரங் தே பசந்தி’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘லூகா சூப்பி’ என்ற பாடலை ரஹ்மானுடன் இணைந்து பாடிருக்கிறார் லதா மங்கேஷ்கர்.இவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஹரிஹரன், உதித் நாராயணன் ஆகியோருடன் இணைந்து இந்தியில் பல பாடல்களைப் பாடியுள்ளார்

Lata Mangeshkar History

வாங்கி குவித்த விருதுகள்:

 லதா மங்கேஷ்கர் பாரத ரத்னா , இந்தியாவின் உயரிய சிவிலியன் விருது, பத்ம பூஷன், பத்ம விபூஷன், வாழ்நாள் சாதனைகளுக்கான ஜீ சினி விருது, தாதாசாகேப் பால்கே விருது உட்பட பல விருதுகள் மற்றும் கௌரவங்களைப் பெற்றுள்ளார். அதோடு 1974 ஆம் ஆண்டில், கின்னஸ் புத்தகத்தில் லதா மங்கேஷ்கர் வரலாற்றில் மிகவும் பதிவு செய்யப்பட்ட கலைஞராக பட்டியலிடப்பட்டுள்ளார். நான்கு வயதிலேயெ படத்தொடங்கி, கிட்டத்தட்ட 65 ஆண்டுகளைக் கடந்து, சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இந்திய திரையுலகில், மிகச்சிறந்த பின்னணிப் பாடகியாக வளம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios