நீங்கள் காதலிக்கும் நபர் உங்களை உண்மையாக காதலிக்கிறாரா என்பதை அறிவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.  

உலகம் முழுவதும் பிப்ரவரி மாதம் 14 ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாட்களின் காதலர்கள், தங்கள் காதலை வெளிப்படுத்த சிறந்த நாளாக கருதுவர். காதலர் தினம் என்றவுடன் 90s கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை உள்ள அனைவருக்கும் கண் முன் வந்து செல்வது ''காதலர் தினம்'' திரைப்பட பாடல் வரிகள் தான். அந்த படத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் ரசிகர்களை என்றென்றும் கிறங்கடிக்க வைக்கிறது. ஆனால், இன்றைய நவீன கால கட்டத்தில், ''Love Breakup'' பிரேக்கப் என்ற வார்த்தை எளிமையான ஒன்றாகி விட்டது. எனவே ஒருவர் நம்மை உண்மையாக காதலிக்கிறாரா என்பதை தெரிந்து கொள்வது உண்மையாக காதலிக்கும் நபர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த பதிவில், நீங்கள் காதலிக்கும் நபர் உங்களை உண்மையாக காதலிக்கிறாரா என்பதை அறிவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

 சுயநலமாக யோசிக்க மாட்டார்கள்:

உங்களை காதலிக்கும் நபர், தன்னை பற்றி மட்டும் சுயநலமாக யோசிக்காமல், உங்களின் எதிர்கால கனவுகள் என்ன என்பதை கேட்டு அறிந்து கொள்வார். அப்படி செய்தால் அவர் உண்மையாக உங்களை காதலிக்கிறார் என்று அர்த்தம். இது போன்ற ஆண்களை நீங்கள் கண்டால் அவசியம் அவரின் காதலை ஏற்று கொண்டு வாழ்க்கை பயணத்தை துணிச்சலாக தொடங்கலாம். இப்படிபட்ட நபர்கள் பொதுநலம் உள்ளத்துடனும் இருப்பார்கள்.

சோதனைகளை, சாதனைகளாக மாற்றும் திறன் படைத்தவர்:

உங்களை உண்மையாக நேசிக்கும் நபர், தனக்கு எவ்வளவு சோதனை வந்தாலும். உங்களுக்காக அவற்றை மாற்றும் திறன் படைத்தவர்கள் ஆவார்கள். 

புது புது விஷயங்களில் ஆர்வம் கொள்வார்:

ஒருவர் உங்களை உண்மையில் நேசிக்கிறார் என்றால் அவர் தனது தீங்கு விளைவிக்கும், குணாம்சங்களை உங்களுக்காக மாற்றி கொள்ள முயற்சிப்பார். குறிப்பாக புதியவற்றை கற்று கொள்ளுதல், புது மனிதர்களுடன் பழகி நல்ல அனுபவத்தை பெறுதல் போன்றவற்றை செய்வார்கள். இது அவரையும் அவரை சுற்றியுள்ள சூழலையும் மகிழ்ச்சியாக வைக்கும். இது போன்ற நபர்கள் அவர்களுக்கு பிடிக்காவிட்டாலும் உங்களுக்காக பலவற்றை செய்ய முயற்சிப்பார்கள்.

பாகுபாடு:

நீங்கள் நேசிக்கும் நபர், உங்களிடம் எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் பழகுகிறாரோ அவர் உங்களை உண்மையாக நேசிக்கிறார் என்று அர்த்தம். அதாவது ஆண், பெண் பாகுபாடு இல்லாமலும், ஏற்ற தாழ்வுகள் இல்லாமலும் பழகுபவர்கள் உண்மையான நேசம் கொண்டவர்கள். இவர்கள் எல்லாரையும் சரி சமமாக நடத்தும் தன்மை கொண்டவர்கள்.

சகஜமாக பழக கூடிய நபர்கள்:

நீங்கள் நேசிக்கும் நபர் உங்களிடம் சண்டை இருந்தாலும் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் உங்களுடன் எப்போதும் போல சகஜமாக பழக கூடியவர்கள். அதே போல கஷ்ட காலத்திலும் உங்களுக்கு துணையாக இருந்து அந்த பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் உள்ளம் உள்ளவர்கள் உண்மையான காதல் கொண்டவர்கள் ஆவார்கள். இவர்கள் உங்கள் வாழ்வில் வசந்ததையும் ஏற்படுத்த கூடிவர்கள். 

குடும்பத்தினருடன் வெளிப்படையாக பேசுதல்:

நீங்கள் காதலிக்கும் நபர், உங்களை பற்றி அவரின் குடும்பத்தினருடன், நண்பர்களுடனும் வெளிப்படையாக பேசுகிறார் என்றால், அவர் உங்களை உண்மையாக காதலிக்கிறார் என்பதாகும். அதே போன்று எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் உங்களை மற்றவர்களிடம் விட்டு கொடுக்காமல் ஒருவர் பேசினாலும் உண்மையாக காதலிக்கிறார் என்று அர்த்தமாகும்.

மேற் கூறிய, குணங்கள் நீங்கள் நேசிக்கும் நபர்களிடம் இருந்தால், அவரை உங்கள் வாழ்க்கை துணையாக இந்த காதலர் தினத்தில் ஏற்று கொள்ள வாழ்த்துக்கள்!