Asianet News TamilAsianet News Tamil

என்னடா..இது புதுசு.. புதுசா கெளப்புறீங்க? ஒமைக்ரானை தொடர்ந்து டெல்டாக்ரான்! தற்காக்க நச்சுனு நாலு டிப்ஸ்!

நாம் இந்த 2022 ஆம் ஆண்டில் எதிர்வரும் சவால்களை பாசிட்டிவாக, எதிர்கொள்ள தேவையான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

How to handle tackle Deltacron variant
Author
Chennai, First Published Jan 10, 2022, 11:59 AM IST

இந்த 2022 ஆம் வருடம் தொடக்கத்தில் உலகளாவிய நிகழ்வுகளைப் பார்க்கும்போது, அவற்றின் கணிப்பு மிகவும் அசாதாரணமான சூழ்நிலையில் இருப்பதை நாம் காண முடிகிறது. கடந்த 2019ஆம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் டெல்டா, டெல்டா பிளஸ், பீட்டா என்று உருமாறி உலக அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலக நாடுகளில் பரவ தொடங்கியது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் மற்றுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் டெல்டாக்ரான்  என்ற பெயரில், சைப்ரஸ் நாட்டின் ஒரு சில பகுதிகளில் தென்படத் தொடங்கி உள்ளது. 

How to handle tackle Deltacron variant
 
 ஓமைகிறான், டெல்டாக்ரான் கரோனா போன்ற  தவிர்க்க முடியாத சில நிகழ்வுகள், இந்த 2022இல் நம் அனைவருக்கும் மனதளவில் தனிமை, சோகம், வேலையிழப்பு, மனச்சோர்வு,  கோபம், பயம், பதட்டம், விரக்தி, பீதி, போன்ற மனநலப் பிரச்சனைகளை வழங்கும் அபாயம் இருக்கிறது. இவை தவிர, வரவிருக்கும் அரசியல் மாற்றங்கள், சுற்றுப்புற மற்றும் சமூகம் சார்ந்த பல்வேறு முரண்பாடுகளையும் எதிர்கொள்ள இந்த வருடத்தில் நாம் தயாராக வேண்டும் என்கிறது.
 
பல ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த வருடம், சமூகம் சார்ந்த சில பிரச்சனைகள் மற்றும் பொருளாதார பின்னடைவு போன்றவற்றிலிருந்து மீண்டுவரும் முயற்சியில் நாம் 'கத்தியின் விளிம்பில்' இருக்கிறோம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

இந்த தொடர்ச்சியான மன அழுத்தமானது, நமது மூளையில் பெரிய மாறுதல்களை உண்டாக்குகின்றன. அதனால் நாம் பல சுவாரஸ்யமான தகவல்களைக் கூட எந்த உணர்வுமின்றி அணுகுவது இயல்பாகி வருகிறது. எனவே, நாம் இந்த 2022 ஆம் ஆண்டினை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு, தேவையற்ற எண்ணங்களைக் கைவிடுவது அவசியமாகிறது. எதிர்வரும் சவால்களை தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் கையாள கற்றுக்கொள்ளுங்கள்.

அதற்காக நாம் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே, நம்மை நாமே மகிழ்ச்சியூட்டும் செயல்களில் கட்டாயம் ஈடுபட வேண்டும். இருப்பினும், நாம் சில சமயங்களில் அதிகப்படியான மன உளைச்சலை உணரும்பட்சத்தில், அதற்கான மருத்துவ ஆலோசனைகளை நாடுவது அவசியமாகும்.

உடற்பயிற்சி செய்வது நமது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.  இது  இருதய நோய்களைக் குறைத்து, இருதயத்தின் ஆயுளை அதிகரித்து, மன அழுத்தத்தினைக் குறைக்க உதவும். உடற்பயிற்சி அதிகமாக மேற்கொள்பவர்கள் அதிக நாட்கள் வாழ்வதாகவும் ஆராய்ச்சிகளும் கூறுகின்றன. காலை எழுந்தவுடன் யோக மற்றும் உடற்பயிற்சிகள் மேற்கொள்வது உடலுக்கு நல்லது.

சமூக விஷயங்களுக்குக்காக உதவுவது மற்றும் சமூகம் சார்ந்த பணிகளை மேற்கொள்வது, மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமின்றி, வாழ்வில் மகிழ்ச்சி, ஆரோக்கியத்தைக் கூட்டுவதுடன் வாழ்நாளையும்  அதிகரிக்கிறது.

How to handle tackle Deltacron variant

புத்தக வாசிப்பு: நல்ல வாசிப்பிற்கு கவனம் மிக அவசியம். வாசிக்கும்போது செலுத்தும் கவனம், தகவல்களை உள்வாங்கிக் கொண்டு அதை தக்க வைத்துக் கொள்ளும் செயலில் மூளையை ஈடுபடுத்துகிறது. இந்த செயல்முறை மூளையை கூர்மையாக்கி, நினைவுத்திறனை மேம்படுத்தும். வாசித்தலோடு தொடர்புடைய மொழியாற்றல், பார்வை, கற்றல் மற்றும் நரம்பியல் இணைப்பு போன்ற அனைத்து செயல்பாடுகளையும் இணைக்கும் சவாலான பணிகளை படிப்பு என்னும் ஒரே செயலால் செய்துவிட முடியும். மேலும், புத்தகங்கள் படிப்பதால் மனஅழுத்தம் குறையும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ளுங்கள்.

 நாம் நமது வாழ்க்கையில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம், மூளையின் செயல்திறன் அதிகரிப்பதாக பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது மூளையைப் புத்துணர்ச்சி அடையச் செய்து நமது உடல்நலனைப் பாதுகாக்கிறது.

மூளை புத்துணர்ச்சியாக இருக்க கேளுங்கள், கேளுங்கள், கேட்டுக் கொண்டே இருங்கள்: கடந்த காலத்தில் என்ன நடந்தது, தற்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது, வருங்காலத்தில் என்ன நடக்க வேண்டும், என்ன நடக்கப்போகிறது என்பதைப் பற்றிய புரிதல் வேண்டும். ஏராளமான புதிய நல்ல விஷயங்களை கேட்டு கொண்டே இருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, நல்ல தூக்கத்தின் மூலம் நமது உடல் சோர்வு, மனச் சோர்வு அனைத்தும் களையப்படுகின்றன. பொதுவாக தூக்கக் குறைபாடு, மனிதரின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருமளவு பாதிக்கிறது. எனவே, ஒவ்வொருவருக்கும் தினமும் 6 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியமாகிறது.

 கடந்த இரண்டு ஆண்டின் நிகழ்வுகள் நம் அனைவருக்கும் மன உளைச்சல், பாதிப்பு மற்றும் ஏமாற்றத்தையும் அதிக அளவில் ஏற்படுத்தியிருந்தாலும், இந்த ஆண்டினை நாம் அனைவரும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை கொண்டு 'பாசிட்டிவ்' நோக்கத்துடன் எதிர்கொள்ளத் தயாராகிக் கொள்வோம்.

Follow Us:
Download App:
  • android
  • ios