Asianet News TamilAsianet News Tamil

சீச்...சீ ..வாய் துர்நாற்றம் வீசுதா.. இனி கவலை வேண்டாம்! சமையலறையில் ஒளிந்திருக்கும் மகத்துவம்!

வாய் துர்நாற்றத்திற்கு, தகுந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், இதைக் கட்டுப்படுத்தவும் தவிர்க்கவும் வீட்டிலேயே சில எளிய வழிமுறைகள் உள்ளன.

How to avoid bad breath in mouth
Author
Chennai, First Published Jan 10, 2022, 12:54 PM IST

வாய் துர்நாற்றம், பேசுபவர், கேட்பவர் இருவருக்குமே தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் பிரச்சனைகளில் முக்கியமானது. இந்த பிரச்சனை உங்களிடம் பேசுபவர்களை முகம் சுளிக்கவைக்கும். ஆனால், தகுந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், இதைக் கட்டுப்படுத்தவும் தவிர்க்கவும் வீட்டிலேயே சில எளிய வழிமுறைகள் உள்ளன.

வாய் துர்நாற்றம்,  ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பெரிய அளவில் பாதிக்கும். தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் இனப்பெருக்க இடமாக அது மாறிவிடும். இது அப்படியே கல்லீரல், சிறுநீரகம் மற்றும் வயிற்றை பாதிக்கக்கூடிய விஷயமாக மாறிவிடும். இந்த வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் அப்படியே பெருகி ஈறு பிரச்சினைகள், பல் சொத்தை போன்றவற்றை உண்டாக்கும். இதற்கு உங்கள் சமையலறையில் இருக்கும், உப்பு, வெதுவெதுப்பான நீர், தேங்காய் எண்ணெய், அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் பேக்கிங் சோடா போன்றவற்றில் உள்ள கிருமி நீக்கும் தன்மை பற்களில் உள்ள அழுக்குகளையும் பாக்டீரியாக்களையும் நீக்கி புத்துணர்ச்சி தருகிறது. 

எனவே ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது மிகவும் அவசியம். பல் மருத்துவர்களின் கூற்றுப்படி உங்கள் வாயை புத்துணர்ச்சியுடனும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும். எனவே இதைச் செய்ய நீங்கள் மவுத்வாஷ்களை பயன்படுத்தலாம். இந்த மவுத்வாஷ்களை நாம் வீட்டிலேயே தயாரிக்க முடியும். இதை எப்படி தயாரிக்கலாம் இதன் மூலம் எப்படி உங்கள் வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என அறிவோம். 

How to avoid bad breath in mouth

​மவுத்வாஷின் முக்கியத்துவம்

மவுத்வாஷின் முக்கிய நோக்கம் அது  வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் பற்கள் சொத்தையாகிக் குழி விழுவதைக் குறைக்கிறது.

இது பற்கள் மற்றும் ஈறுகளைப் பலப்படுத்துகிறது. புத்துணர்ச்சி ஊட்டும் சுவாசத்தைத் தருகிறது மற்றும் பல் இடுக்குகளில் அழுக்குகள் தங்குவதைத் தடுக்கிறது.

பல் துலக்குவதற்கு முன்பாக இடுக்குகளில் உள்ள அழுக்குகளை கழுவி வெளியேற்றுகிறது மற்றும் வாய்ப்புண்ணை ஆற்ற உதவுகிறது. வீட்டிலேயே மவுத்வாஷ்களை தயாரிக்க வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு வாயை கொப்பளிக்கவும். இது மிகவும் எளிமையான மவுத்வாஷாக செயல்படுகிறது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் உங்க பற்களை சுத்தமாகவும், ஈறுகளை சுத்தமாகவும் வைக்க உதவுகிறது. 1 டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை எடுத்து 15-20 தடவை வாயில் வைத்து கொப்பளியுங்கள். வாயில் வைத்து கொப்பளிக்கும் போது விழுங்கி விட வேண்டாம்.

பிறகு சாதாரண நீரைக் கொண்டு வாயை கொப்பளியுங்கள். இது உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இது பற்களுக்கிடையே உள்ள அழுக்குகளை நீக்கவும், பற்களை வெண்மையாக வைக்கவும் உதவுகிறது.

​எசன்ஷியல் ஆயில்

அத்தியாவசிய எண்ணெய்கள் பல அற்புதமான பண்புகளைக் கொண்டுள்ளது. கிராம்பு எண்ணெய் மற்றும் பட்டை எண்ணெய்கள் இரண்டையும் ஒன்றாக கலந்து மவுத்வாஷ்களாக நாம் பயன்படுத்தலாம். இது பற்சொத்தையை போக்க உதவுகிறது. 1 கப் தண்ணீரில் 10 சொட்டுகள் கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை எண்ணெய்யை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

அதை 2 டேபிள் ஸ்பூன் மற்றும் 1/2 கிளாஸ் தண்ணீரில் கலந்து வாயைக் கொப்பளிக்கப் பயன்படுத்த வேண்டும். இது வாயில் உள்ள தொற்றுக்களை நீக்கப் பயன்படுகிறது.

பேக்கிங் சோடா

How to avoid bad breath in mouth

பேக்கிங் சோடா வாய்வழி ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. 1/2 கிளாஸ் டம்ளரில் வெதுவெதுப்பான நீரைச் சேர்த்து 1/2 டீ ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

இரண்டையும் ஒன்றாக கலந்து வாயில் வைத்து சில விநாடிகள் கழித்து கொப்பளிக்க வேண்டும். பிறகு பல் துலக்கிக் கொள்ளுங்கள். பேக்கிங் சோடாவை விழுங்க வேண்டாம். இது பற்களில் உள்ள கறைகளை போக்கவும் கெட்ட துர்நாற்றத்தை தடுக்கவும் உதவுகிறது.

ஒரு அரை கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீ ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதைக் கொண்டு வாயை கொப்பளித்து வாருங்கள். இது வாயில் உள்ள அழுக்குகள் மற்றும் பாக்டீரியாக்களை போக்க பயன்படுகிறது. ஒட்டுமொத்த வாய்வழி ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. மவுத்வாஷ்கள் பற்களுக்கிடையே உள்ள அழுக்குகள், பற்சொத்தைகளை அகற்ற உதவுகிறது. இது வாயில் இருக்கும் கெட்ட துர்நாற்றத்தைப் போக்கவும் உதவுகிறது. இந்த எளிய ''மவுத்வாஷை'' நாம் வீட்டிலேயே தயாரிக்க முடியும். உங்கள் பற்களை வெண்மையாக வைத்துக் கொள்ள முடியும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios