Asianet News TamilAsianet News Tamil

Foot crack: நாள்பட்ட பித்த வெடிப்பு குணமாக...8 எளிய வீட்டு குறிப்புகள்..!!

நாள்பட்ட பித்த வெடிப்புகள் தாங்க முடியாத வலி, எரிச்சலை உண்டாக்கும். இவற்றையெல்லாம் சரி செய்ய  வீட்டில் இருக்கும் 8 எளிய  உதவி குறிப்புகள்.

Home remedies tips for foot crack
Author
Chennai, First Published Jan 23, 2022, 1:55 PM IST

நாள்பட்ட பித்த வெடிப்புகள் தாங்க முடியாத வலி, எரிச்சலை உண்டாக்கும். இவற்றையெல்லாம் சரி செய்ய  வீட்டில் இருக்கும் 8 எளிய  உதவி குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கால்களின் அழகை கெடுக்கும் வகையில் வருவது தான்பித்த வெடிப்பு. இந்த பித்த வெடிப்பு வருவதற்கு வறட்சியும் ஒரு காரணம். வறட்சி மட்டுமல்லாமல் வேறு சில காரணங்களும் குதிகால் வெடிப்பை ஏற்படுத்தும். அதேசமயம் வறண்ட கால்களைக் கொண்டவர்களுக்குத் தான் அதிகமாக இந்தப் பிரச்சனை வரக் கூடும். வெடிப்புகள் தாங்க முடியாத வலி, எரிச்சலை உண்டாக்கும். 

Home remedies tips for foot crack

இவற்றை  வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே எப்படி சரிசெய்வது என்பதை  கீழே பார்க்கலாம்.

வாழைப்பழம் :

வாழைப் பழத்தை நன்கு மசித்து கூழாக்கிக் கொள்ளவும். கால்களை நன்கு சுத்தம் செய்து துடைத்தபின் வாழைப்பழத்தை வெடிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் தடவுங்கள். 20 நிமிடங்கள் காத்திருந்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

எலுமிச்சை:

எலுமிச்சை சாறை வெது வெதுப்பான நீரில் பிழிந்து கலந்து கொள்ளுங்கள். அதில் 20 நிமிடங்கள் கால்களை சுத்தம் செய்தபின் ஊற வையுங்கள். வெடிப்புகளோடு கால்களில் இருக்கும் இறந்த செல்களையும் நீக்கிவிடும்.

மருதாணி:

கைகளுக்கு மருதாணி வைப்பது போல, கால்களுக்கும் மருதாணி வைக்கலாம். அல்லது மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் குதிகால் வெடிப்பு நீங்கும்.

பப்பாளி பழம்:

Home remedies tips for foot crack

பித்த வெடிப்பு ஏற்பட்டவர்கள், பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் குதிகால் வெடிப்பு குணமாகும்.

பெட்ரோலியம் ஜெல்லி:

ஒரு மேசைக் கரண்டி பெட்ரோலியம் ஜெல்லில் ஒரு மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு பிழிந்து நன்குக் கலக்கிக் கொள்ளுங்கள். பின் கால்களை சுத்தம் செய்த பின் கலவையை கால்களில் தடவி நன்கு தேயுங்கள். அந்த கலவையை கால்கள் உள்ளிழுக்கும் வரை தேய்க்கவும். பின் கழுவாமல் அப்படியே சாக்ஸ் அணிந்து இரவு தூங்கிவிடுங்கள். தினமும் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடாவை  3 மேசைக் கரண்டி தண்ணீரில் கலந்து கால்களை 15 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் சொர சொரப்பான கல்லைக் கொண்டு கால்களை நன்கு தேய்க்க குதிகால் வெடிப்பு நீங்கி, அழுக்கு, இறந்த செல்களும் நீங்கும்.

கற்றாழை ஜெல்:

கால்களை 5 நிமிடம் வெது வெதுப்பான நீரில் ஊற வைத்து சொர சொரப்பான கல்லினால் இறந்த செல்களை நீக்கி விடுங்கள். பின் கற்றாழை ஜெல்லை கால்களில் நன்குத் தேய்க்கவும். ஜெல்லைக் கழுவாமல் இரவு முழுவதும் சாக்ஸ் அணிந்து தூங்கிவிடுங்கள். தினமும் செய்தால் சிறந்த பலன் உண்டு.

Home remedies tips for foot crack

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய்யை தினசரி காலில் தடவி உலர வைப்பதன் மூலம் காலில் ஈரப்பதத்தை அதிகரிக்க முடியும். மேலும் காலில் தேங்கும் பாக்டீரியாக்களையும் அழிக்கும். எனவே, மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி, வீட்டில் இருந்த படியே உங்களது பித்த வெடிப்பை போக்கலாம். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios