Asianet News TamilAsianet News Tamil

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையா? இனி கவலை வேண்டாம்! இதை ட்ரை பண்ணுங்கோ போதும்?

ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியை தூண்டும் 6 முக்கிய ஆயுர்வேத கோட்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 
 

Healthy menstrual tips for Ayurvedic
Author
Chennai, First Published Jan 6, 2022, 11:52 AM IST

இன்றைய நவீன காலத்து பெண்கள் சந்தித்து வரும் முக்கியமான பிரச்சினை ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி   ஆகும். இதன் காரணமாக உடல்பருமன், கரு உருவாவதில் சிக்கல், மனநிலை மாற்றங்கள் மற்றும் இதய பாதிப்புகள் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். எனவே, ஒவ்வொரு பெண்ணும் ஆரோக்கியமான நல்வாழ்வுக்கு முறையான மாதவிடாய் சுழற்சியைக் கொண்டிருப்பது மிகவும் அவசியம்.

உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்துதல், உடற்பயிற்சி செய்வது, உடல் எடை குறைத்தல், ஆரோக்கியமான உணவை உட்கொள்வது போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை உடனடியாக கட்டுப்படுத்த முடியும். அந்த வகையில், ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியை தூண்டும் 6 முக்கிய ஆயுர்வேத கோட்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை, ஒவ்வொரு பெண்ணும் நல்ல உடல் ஆரோக்கியத்திற்காக, நிச்சயம் பின்பற்ற வேண்டும்.

Healthy menstrual tips for Ayurvedic
 
1. நீங்கள் ரெஸ்ட்டில் இருப்பது அவசியம்:

ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சிக்கு உடலுக்கு போதுமான அளவு ஓய்வு கொடுப்பது முக்கியம். ஏனெனில், சில சமயங்களில் அதிகப்படியான வேலை, பேசுவது, சிந்தனை, செக்ஸ் அல்லது எந்தவொரு உடல் செயல்பாடுகளும் மாதவிடாய் சுழற்சியின் இயற்கையான ஓட்டத்தைத் தடுக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோன்று, நீங்கள் சீக்கிரம் எழுந்திருப்பது, சரியான வேலை நேரத்தை பராமரிப்பது மற்றும் சரியான நேரத்தில் உணவை உட்கொள்வது போன்றவையும் இதில் அடங்கும்.

2.  சிறுநீர்  மற்றும் மலம் கழித்தலை கட்டுப்படுத்த வேண்டாம்:

உங்கள் மாதவிடாய் சுழற்சியின் போது, சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல் மற்றும் தும்முவது போன்ற இயற்கையின் நிகழ்வினை ஒருபோதும் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டாம். ஏனெனில், நீங்கள் கீழே செல்லும் உடல் ஆற்றலை நிறுத்தினால், அது மாதவிடாய் சுழற்சியை எதிர்மறையாக பாதிக்கிறது.  

3. மன அழுத்தமில்லாமல் வாழ கற்று கொள்ள வேண்டும்:
 
மன அழுத்தம், பதற்றம் போன்றவை உங்கள் ஹார்மோன் அளவை வெகுவாக பாதிக்கிறது. இதனால் மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு ஏற்படும். நீங்கள் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகும் போது அதன் காரணமாக, கருமுட்டை உற்பத்தி பாதிப்படையும். இதனை நீங்கள் நடைபயிற்சி செய்வது, சத்தான உணவுகளை சாப்பிடுவது, தேவையான அளவு தண்ணீர் குடிப்பது போன்ற வாழ்வியல் முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் எளிதில் சரிசெய்யலாம்.

4. உணவில் மாற்றம்:

புரதம், ஆன்டிஆக்ஸிடென்ட் சத்துகள் இருக்கும் உணவுகளை குறைந்த அளவில் சாப்பிடும்போது, அட்ரினல் மற்றும் தைராய்டு சுரப்பிகளில் பிரச்சனை ஏற்படும். இது, மாதவிடாயில் பிரச்சனையை ஏற்படுத்தும்.

எனவே, மாதவிடாய் சுழற்சியின் போது, சரியான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அதேபோன்று உங்கள் உணவில் இஞ்சி, கிராம்பு, குங்குமப்பூ, பெருஞ்சீரகம், சீரகம், இலவங்கப்பட்டை, கொத்தமல்லி, பூண்டு ஆகியவற்றைக் சேர்த்து கொள்ளலாம்.

5. யோகா மற்றும்  சுவாசப் பயிற்சி அவசியம்:

Healthy menstrual tips for Ayurvedic
 
மாதவிடாய் சுழற்சியின் போது ஒரு பெண் யோகா செய்யலாமா அல்லது இல்லையா என்ற கேள்வி இன்னும் விவாதத்திற்குரியது. ஆயினும் கூட, பெரும்பாலான ஆயுர்வேதக் கொள்கைகள், பெண்களின் முறையான மாதவிடாய் சுழற்சிக்கு அன்றாடம் மிதமான யோகாவைக் மேற்கொள்ள பரிந்துரைக்கின்றன.

ஏனெனில், யோகா பயிற்சி மூலம், பி.சி.ஓ.எஸ், கருவுறாமை, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி போன்ற பிரச்சினைகளை குணப்படுத்த முடியும் என்பது ஆயுர்வேத கோட்பாடாகும்.

ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சிக்கு சுவாசப் பயிற்ச்சி செய்ய வேண்டியது அவசியம். இது ஒவ்வொரு பெண்ணின் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாகும்.

ஒரு நிலையான வழக்கத்தை பின்பற்றுங்கள்:

ஆயுர்வேத கோட்பாடு, நிலையான வழக்கத்தில் கவனம் செலுத்துகிறது. உங்கள் உடல் கடிகாரம் போல ஓடக் கூடியது. இவற்றில், நீங்கள் சீக்கிரம் எழுந்திருப்பது, சரியான வேலை நேரத்தைப் பராமரிப்பது மற்றும் சரியான நேரத்தில் உணவை உட்கொள்வது ஆகியவை அடங்கும். அதிகப்படியான செயல்பாடு மற்றும் அதிகப்படியான வேலை உங்கள் மாதவிடாய் சுழற்சியைத் தடுக்கும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

எனவே, மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத மருத்துவத்தின் கோட்பாட்டு வழிமுறைகளை பின்பற்றினால், உங்களின் மாதவிடாய் சுழற்சி சீராவது மட்டுமின்றி, நீங்கள் ஆரோக்கியமாகவும் வாழலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios