Asianet News TamilAsianet News Tamil

பெண்களே உஷார்...! குறி வைக்கும் தைராய்டு...கவலை, பதட்டம், நடுக்கம் இருந்தால் அலட்சியம் வேண்டாம்..!

இன்றைய நவீன கால கட்டத்தில், அதிகரித்து வரும் உடல் உபாதைகளில் தைராய்டு அனைத்து வயதினரையும் பாதிக்கும் பிரச்சனையாக உள்ளது. 

Early Warning Signs of Thyroid Issues for women
Author
Chennai, First Published Feb 13, 2022, 1:41 PM IST

இன்றைய நவீன கால கட்டத்தில், அதிகரித்து வரும் உடல் உபாதைகளில் தைராய்டு அனைத்து வயதினரையும் பாதிக்கும் பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக, பெண்களை அதிகம் அச்சுறுத்தக்கூடிய நோய்களில் முக்கியமானதாக தைராய்டு உருவெடுத்துள்ளது. தைராய்டு மிகக் குறைவாக சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்போதைராய்டிஸம் (Hypothyroidism) என்றும் தைராய்டு அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்பர் தைராய்டிஸம் (Hyperthyroidism) என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Early Warning Signs of Thyroid Issues for women

தைராய்டு அளவு நம்முடைய உடலின் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறைந்த அளவு தைராய்டு ஹார்மோன்கள் உடலின் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். உடலின் மற்ற உறுப்புகளைப் போலவே தைராய்டு சுரபிகளை கட்டுப்படுத்துவதும் மிகவும் முக்கியமானது. நமது உடலின் முக்கியமான ஹார்மோன்களின் உற்பத்திக்கு இதுவே காரணம். தைராய்டு உறுப்பு நமது கழுத்துக்கு முன்னால் உள்ளது. இது பட்டாம்பூச்சி வடிவத்தினை கொண்டுள்ளது.

தைராய்டு அறிகுறிகள்:

தைராய்டு சுரப்பு அதிகமானால் ஆரம்ப நிலையில் உடல் சோர்வாக இருப்பதோடு, உடல் எடை குறையும். பிறகு செயல்பாடுகள் மந்தமாகும். மேலும், எடை இழப்பு, வளர்சிதை மாற்றம், ஆற்றல் போன்ற முக்கிய செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது.ஹார்மோன் அளவுகள் திடீரென மாறும்போது, ​​பலவிதமான அறிகுறிகள் நமது உடலில் தோன்றக்கூடும். தைராய்டு குறைவாக சுரக்கும்போது, ஒருவிதமான எரிச்சல், பதற்றம்,  இதயத்துடிப்பில் மாறுபாடு ஏற்படுவது இதன் முக்கியமான அறிகுறிகளாகும். குறிப்பாக, பெண்களுக்கு முறையற்ற மாதவிலக்கு, கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பதில் பிரச்னை என வரிசை கட்டி நிற்கும்.

இந்த அறிகுறி பெண்களிடையே பொதுவாக காணப்படுகிறது என்கின்றனர். கண்டுகொள்ளாமல் இருப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது குறித்து இங்கு காண்போம்.

சோர்வு மற்றும் பலவீனம் : 

சோர்வாக இருப்பது தைராய்டின் முக்கிய அறிகுறியாகும். சோர்வு ஒரு அடிப்படை தைராய்டு பிரச்சினையின் விளைவாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். தைராய்டு சுரப்பி வளர்சிதை மாற்ற செயல்பாட்டை கணிசமாக பாதிக்கும்.இதனால், தைராய்டுடன் தொடர்புடைய சோர்வு மற்றும் பலவீனம் இதயத் துடிப்பு, தசை பலவீனம் மற்றும் நடுக்கம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

Early Warning Signs of Thyroid Issues for women

தூங்குவதில் சிரமம் : 

தைராய்டு செயலிழப்பு தூக்கத்தை மோசமாக பாதிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். நல்ல தூக்கத்தை பெறுவதே கடினமாக இருக்கலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகளும் தென்படலாம் என்பதால் இவற்றை உணர்ந்தால் நீங்கள் சோதனை செய்து கொள்ளலாம்.

ஆரோக்கியம் : 

தைராய்டு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கவலை, பதட்டம், நடுக்கம், எரிச்சல், தீவிர மனநிலை போன்ற மாற்றங்கள் ஏற்படும். ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறிகளில் நினைவாற்றல் இழப்பு, செறிவு அளவு குறைதல் போன்றவை ஏற்படுகிறது.

மாதவிடாய் மாற்றங்கள் : 

Early Warning Signs of Thyroid Issues for women

தைராய்டு பாதித்த பெண்களில் மாதவிடாய் மாற்றங்கள் தான் மிகப்பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. தைராய்டு சுரப்பியில் ஏற்படும் இடையூறுகளே இந்த மாற்றத்திற்கு காரணமாகிறது.எனவே 35 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக தைராய்டு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தடுப்பது எப்படி?

உணவுப் பொருட்களில் கலந்திருக்கும் அயோடின் சத்து அதிகரித்தால் எந்தவித பாதிப்பும் வராது. எனவே, தைராய்டு நோயாளிகள் நோய்க்கான சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்வதோடு முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டியதும் அவசியமாகிறது. அதற்காக நீங்கள் உங்கள் உணவில் பால், முட்டை, இறைச்சி, சோயா, தானியங்கள் போன்றவற்றை சேர்த்து கொள்வது அவசியம். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios