Asianet News TamilAsianet News Tamil

Kothamalli sadam: உங்கள் கணவரை கவர கொத்தமல்லி சாதத்தை... இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க..! சூப்பர் டிப்ஸ்..

உங்கள் கணவரை கவர, கொத்தமல்லி சாதத்தை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். இதோட சுவை இன்னும் இன்னும் சூப்பரா இருக்கும்.

Coriander recipe and kothamalli sadam
Author
chennai, First Published Feb 21, 2022, 12:21 PM IST

கொத்தமல்லி என்றாலே அதற்கு ஒரு தனி ருசி இருக்கத்தான் செய்கிறது. எந்த உணவு பொருட்கள் செய்தாலும், அதில் கொத்தமல்லி சேர்த்து சாப்பிட்டால், ருசியாகத்தான் இருக்கும். அப்படி, சுவை மிகுந்த உணவு பொருளான கொத்தமல்லியில் சாதம் செய்தால், எப்படி இருக்கும் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

 எப்போதும் போல கொத்தமல்லி சாதம் செய்வதைவிட, அதில் சில வித்தியாசமான பொருட்களை சேர்த்து வித்தியாசமான முறையில் செய்தால் ருசி இன்னும் இன்னும் அதிகமாக இருக்கும். கொத்தமல்லி சாதத்தில் கொஞ்சம் தக்காளி, கொஞ்சம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து செய்து சாப்பிட்டால் அதன் ருசி அட்டகாசம். 

Coriander recipe and kothamalli sadam

தேவையான பொருள்கள்:

உதிராக வடித்த சாதம் - 2 கப் 

கடுகு  -  1டீ ஸ்பூன் 

கறிவேப்பிலை - சிறிதளவு 

நெய் - 2 ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

மல்லித் தழை - 2 கட்டு 

மிளகாய் வற்றல் - 10

 உளுந்து - 1 ஸ்பூன் 

பெருங்காயம் - தேவையான அளவு 

புளி - தேவையான அளவு 

எண்ணெய் - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

சீரகம் – 1 ஸ்பூன்.

முந்திரி பருப்பு – 10

வேர்க்கடலை வறுத்தது – 10

பெரிய வெங்காயம் – 1 கைப்பிடி அளவு

இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்

தக்காளி பழம் - 2 (கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டி சேர்த்து)

 மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்

Coriander recipe and kothamalli sadam

எட்டு வீட்டுக்கும் மணக்கும், சுவை இழுக்கும் கொத்தமல்லி சாதம் செய்முறை...
 
1. முதலில் ஒரு மீடியம் சைஸில் இருக்கும் கொத்தமல்லி கட்டை அடியில் இருக்கும் தடிமனான காம்பை மட்டும் நீக்கி விட்டு, கொஞ்சம் பொடியாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

2. 100 கிராம் அளவு கொத்தமல்லி தழை எடுத்துக் கொண்டால், வடித்த சாதம் 3 கப் அளவிற்கு சரியாக இருக்கும்.

3. பாசுமதி அரிசி அல்லது சாதாரண அரிசியை கூட உதிரி உதிரியாக வடித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். வடித்த சாதம் 2 கப் அளவு இருக்க வேண்டும். (1 டம்ளர் அல்லது 1 ஆழாக்கு அரிசியை வேக வைத்துக் கொண்டால் சரியாக இருக்கும்.)

இப்போது இந்த சாதத்தை தாளித்து விடலாம். ஒரு அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து கொள்ள வேண்டும். அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அல்லது நெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், முந்திரி பருப்பு, வறுத்த வேர்க்கடலை, கருவேப்பிலை கொத்து, இந்த பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். 

அதன் பின்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 கைப்பிடி அளவு, இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

அதன்பின்பு 2 தக்காளி பழங்களை கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டி சேர்த்து, 2 நிமிடம் வதக்கி தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், சேர்த்து தக்காளியை தாளிப்புடன் நன்றாக கலந்து விட்டு, ஒரு மூடி போட்டு 2 நிமிடம் வேக வைத்து விடுங்கள். தக்காளி வேக வேண்டுமே தவிர, அப்படியே குழைந்து தண்ணீர் விடக்கூடாது.

Coriander recipe and kothamalli sadam

தக்காளி சாஃப்டாக வெந்து வந்த பிறகு, மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் கொத்தமல்லி விழுதை கடாயில் ஊற்றி, அடுப்பை சிம்மில் வைத்து விட்டு 2 லிருந்து 3 நிமிடங்கள் வதக்கினால் கொத்தமல்லித் தழையில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் சுண்டி, தொக்கு பதத்திற்கு வந்துவிடும். 

இப்போது உதிரி உதிரியாக வடித்து வைத்திருக்கும் சாதத்தை கடாயில் கொட்டி லேசாக கிளறி சூடு செய்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கலந்துவிட்டு சுடச்சுட பரிமாறுங்கள். ஆரோக்கியமான அருமையான வித்தியாசமான சுவையில் கொத்தமல்லி தக்காளி சாதம் தயார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios