Bride viral dance: உலகின், எங்கோ ஒரு மூலையில் நெகிழ்ச்சியான, சில விசித்திரமான,வேடிக்கையான, சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. 

உலகின், எங்கோ ஒரு மூலையில் நெகிழ்ச்சியான, சில விசித்திரமான,வேடிக்கையான, சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. இன்றைய நவீன உலகில், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லாவற்றிக்கும் ஆன்லைனில் பதிவிடுவது, ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அவை சில சமயங்களில், நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், சில வீடியோ நமக்கு கோபத்தை தூண்டும், சிலவற்றை வேடிக்கையாக கடந்து செல்வோம். அப்படியான ஒரு வேடிக்கையான நிகழ்வு அரங்கேறியுள்ளது.

சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. இந்திய திருமணங்களுக்கு பல சிறப்பம்சங்கள் உள்ளன. அட்டகாசமான நடன அசைவுகள், கிண்டல் கேலிகள், கலாட்டா நிகழ்வுகள் என நமது திருமணங்களில் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. 

பொதுவாக தன்னுடைய திருமணத்தில் தன்னுடைய வருகை ஒரு பிரம்மாண்டமான முறையில் இருக்க வேண்டும் என திருமணம் புரிந்துகொள்ளும் மணமகள் நினைப்பது வழக்கம். வெட்கப்பட்டு, குனிந்த தலையுடன் தான் மணமகள் இருக்க வேண்டும் என்ற சிந்தனை பழங்கால சிந்தனையாகி விட்டது.

இப்பேதெல்லாம் பல திருமணங்களை புரோகிதர்களுக்கு பதிலாக போட்டோகிராபர்களால்தான் நடத்துகிறார்கள் என சிலர் கிண்டலாகக் கூறுகிறார்கள்.

தற்போது மணம் புரியும் பெண்கள், வழக்கமான பாணியை புறக்கணித்து புதுப்புது விதங்களில் திருமண நாளை அனுபவிக்க ஆசைப்படுகிறார்கள். இப்போதும் அப்படிப்பட்ட ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. இந்த வீடியோவில், மணமகள் தனது திருமணத்தில் மேள தாளத்துக்கு ஏற்றவாறு அட்டகாசமாக நடமாடுவதைக் காண முடிகின்றது. 

இந்த உற்சாகமான மணமகள், அழகான திருமண லெஹெங்காவில் தேவதைப் போல காணப்படுகிறார். தனது திருமண நாளில் அவர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பது அவர் ஆடும் அழகான மற்றும் துடிதுடிப்பான நடன அசைவுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. 

 இந்த வேடிக்கையான வீடியோ மக்களை மிகவும் சிரிக்க வைக்கிறது. இதற்கு இதுவரை மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் பார்த்து லைக் குவிந்து வருகின்றனது. கமெண்ட் செக்‌ஷனில் பல ஹார்ட் எமோஜிகளும் ஃபையர் எமோஜிகளும் நிரம்பியுள்ளன.

View post on Instagram

மணமகளின் இந்த அசத்தலான வீடியோவுக்கு இணையத்தில் வேகமாக பரவி வைரல் ஆகி வருகிறது. சிலரோ, இவ்வளவு கனமான லெஹங்காவை அணிந்துகொண்டு அவரால் எப்படி இவ்வளவு அமர்க்களமாக நடனமாட முடிந்தது என்று ஆச்சரித்ததில் உள்ளனர்.