Asianet News TamilAsianet News Tamil

Travel: இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட காதலர்களா நீங்கள்? உல்லாசமாக இந்த 5 நாடுகளை சுற்றிப் பார்க்கலாம்!!

கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களும், செலுத்தி கொண்ட காதலர்கள், சுற்றி பார்ப்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து  நாடுகளும் வரவேற்பு அளித்துள்ளது.

5 countries two travel for lovers
Author
Chennai, First Published Feb 6, 2022, 1:59 PM IST

கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களும், செலுத்தி கொண்ட காதலர்கள், சுற்றி பார்ப்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து  நாடுகளும் வரவேற்பு அளித்துள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா நோய் தொற்றுகள் அதிகரித்து வரும் சூழலில், பல்வேறு நாடுகள் பயணங்களுக்கான தடைகளை வைத்திருந்த நிலையில், காதலர்களை வரவேற்கும் விதமாக, சுற்றுலாத்துறையை மீட்டெடுக்கும் வகையிலும் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளன.

5 countries two travel for lovers

அந்த வகையில் இரண்டு டோஸ்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திய காதலர்கள், சுற்றுலாவுக்காக பயணிக்க விரும்பினால் ஏராளமான நாடுகள் அவர்களை வரவேற்க காத்திருக்கின்றன. இருந்தாலும் ரம்மியமான இயற்கை, வானளாவிய கலை நயமிக்க கட்டடங்கள் என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த 5 நாடுகளுக்கு காதலர்கள் தற்போது சுற்றுலா செல்வது சிறப்பாக அமையும்.

வியட்நாம் : 

5 countries two travel for lovers

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வியட்நாம் ஒன்றாகும். இந்தியாவில் இருந்து சுற்றுலா செல்லும் விருப்பமான  நாடுகளில் இதுவும் ஒன்றாகும். வியட்நாமின், பழங்கால கட்டடங்கள் அனைத்தும் இன்றுவரை உறுதியுடன் நிற்கின்றன. இங்குள்ள நவீன வரலாறு, அழகான கடற்கரைகள், அழகிய நிலப்பரப்புகள், அற்புதமான உணவு மற்றும் படகு சவாரி போன்றவை காதலர்களை வரவேற்கும் விதமான அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், வெளிநாடுகளில் இருந்து இங்கு பயணிக்கும் பயணிகள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது மிக அண்மையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதற்கான ஆதாரம் ஆகியவற்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

பிரிட்டன் : 

முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் அனைத்தையும் பிரிட்டன் அண்மையில் ரத்து செய்தது. இங்கு பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. ஆனால், பயணம் புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு உள்ளாக இவர்கள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். பிரிட்டன் காதலர்கள் சுற்றி பார்ப்பதற்கு ஏற்ற இடமாக உள்ளது.

தாய்லாந்து : 

5 countries two travel for lovers

பொதுவாக சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள தாய்லாந்து, தற்போது நல்ல செய்தி ஒன்றை அறிவித்திருக்கிறது. அதாவது, பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கு குவாரண்டைன் தேவை இல்லை என்று இந்நாடு தெரிவித்துள்ளது. முன்னதாக, ஒமைக்ரான் பாதிப்புகளை ஒட்டி, குவாரண்டைன் கட்டுப்பாடுகளை தாய்லாந்து விதித்திருந்தது. தற்போது, வருகிற காதல் ஜோடிகளை வரவேற்கும் விதமாகவும், சுற்றுலாவை மட்டுமே நம்பியுள்ள தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும், கட்டுப்பாட்டை தற்போது தாய்லாந்து நீக்கியுள்ளது.

சிங்கப்பூர்:

பிற நாடுகளைப் போல சிங்கப்பூர் அரசு தற்போது பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. தடுப்பூசி செலுத்தி இருந்தும் அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்களுக்கு எந்தவித பரிசோதனை நடவடிக்கைகளும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காதலர்களுக்கும் சுற்றி பார்ப்பதற்கு இது ஒரு சிறந்த இடமாகவும். 

5 countries two travel for lovers

சிப்ரஸ்:

பிப்ரவரி மாதம் முதல் சுற்றுலாப் பயணிகளுக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என்று சிப்ரஸ் நாட்டு அரசு அறிவித்துள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தியது உட்பட அனைத்து தடுப்பூசிகளுக்கான சான்றிதழ்களையும் கொண்டு செல்பவர்களுக்கு எந்தவித தடையும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios