Asianet News TamilAsianet News Tamil

Lovers day tourism: காதலர் தினத்தில் உங்கள் காதலை வெளிப்படுத்த... இந்தியாவை சுற்றியுள்ள அழகான 5 இடங்கள்..!!

கீழே குறிப்பிட்டுள்ள 5 நாடுகளுக்கும், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவை என்னென்ன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம்.

5 Countries near india open for tourism
Author
Chennai, First Published Feb 3, 2022, 1:01 PM IST

ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாட்களின் காதலர்கள், தங்கள் காதலை வெளிப்படுத்த மற்றும் பிரேக் செய்ய சிறந்த நாளாக கருதுவர். காதலர் தினம் என்றவுடன் 90s கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை உள்ள அனைவருக்கும் கண் முன் வந்து செல்வது ''காதலர் தினம்'' திரைப்பட பாடல் வரிகள் தான். அந்த படத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் ரசிகர்களை என்றென்றும் கிறங்கடிக்க வைக்கிறது. இளசுகளை சொக்க வைக்கும் காதலர் தின நாளில், ஒவ்வொருவரும் பார்க், பீச், தியேட்டர் என்று தங்கள் காதலை வெளிப்படுத்த பல்வேறு இடங்களை தெரிந்தெடுப்பார். சிலர் தங்கள் காதலை மறக்க முடியாத தருணங்கள் ஆக்க ஒரு படி மேலே போய் வெளிநாட்டு சுற்று பயணங்களுக்கு செல்வார்கள்.

5 Countries near india open for tourism

ஆனால், ஒட்டுமொத்த உலகமும் கரோனா என்கின்ற கொடிய வைரஸால் இரண்டு ஆண்டுகளாக ஸ்தம்பித்துப்போன நிலையில், சுற்றுலா தளங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. கரோனாவால் வீட்டைவிட்டு வெளியே போக முடியாமல் பலரும் முடங்கிக் கிடந்த சூழலில், பல்வேறு விழாக்களை வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் மூலம் மகிழ்ச்சியாக கொண்டாடிய பல தருணங்கள் நினைவூட்டப்பட்டு, மீண்டும் அதே இடங்களைச் சுற்றி பார்க்கும் ஏக்கத்தை தூண்டியிருக்கின்றன.

எனவே, தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டும், உங்கள் காதலை வெளிப்படுத்தவும், சுற்றி பார்ப்பதற்கு பாதுகாப்பான முறையிலும் உள்ள 5 அழகான வெளிநாட்டு சுற்றுலாத்தலங்கள் தேர்தெடுக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

 கீழே குறிப்பிடும் நாடுகளுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவை என்ன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம்.

5 Countries near india open for tourism

தாய்லாந்து 

முக்கியமாக இளம் வயது சுற்றுலா பயணிகளின் ஈர்ப்பை பெருமளவு பெற்றுள்ளது தாய்லாந்து. தாய்லாந்து நாட்டின் கிராபி மாகாணத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த பீச்களில் ஒன்றாக 'ரயிலே' இருக்கிறது. அந்தக் கடற்கரையில் அமைந்திருக்கும் வெள்ளை மணல், தெளிந்த நீல நிறக் கடல் நீர், நிச்சயம் நாம் சொர்க்கத்தை கண்டுவிட்டது போன்ற உணர்வைக் கொடுக்கும். அங்கு நீங்கள் உங்கள் காதலை வெளிப்படுத்த சிறந்த ஒன்றாகும்.  

வியட்நாம்:  

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வியட்நாம் ஒன்றாகும். இந்தியாவில் இருந்து சுற்றுலா செல்லும் விருப்பமான  நாடுகளில் இதுவும் ஒன்றாகும். வியட்நாமின், பழங்கால கட்டடங்கள் அனைத்தும் இன்றுவரை உறுதியுடன் நிற்கின்றன. இங்குள்ள நவீன வரலாறு, அழகான கடற்கரைகள், அழகிய நிலப்பரப்புகள், அற்புதமான உணவு மற்றும் படகு சவாரி போன்றவை சுற்றுலா பயணிகள் இடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

5 Countries near india open for tourism

 மியான்மர்: 

இந்தியர்கள் அதிகம் விரும்பும் நாடு. மியான்மரில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் யாங்கோன் மற்றும் மாண்டலே போன்ற பெரிய நகரங்கள் உள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது மியான்மருக்கு குறைவான சுற்றுலா பயணிகளே வருவதால், கரோனா காலகட்டத்தில் பாதுகாப்பிற்கு ஏற்ற இடமாக உள்ளது. மியான்மரின் கலாச்சாரங்கள், இரவு சந்தைகள், பாரம்பரிய சுற்றுலா, ஏராளமான கடற்கரைகள், ஆன்மீக சுற்றுலா போன்றவை இந்திய சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கின்றன. மேலே, குறிப்பிட்டுள்ள நாடுகள் அனைத்திற்கும் குறைந்த அளவு கட்டணங்களே செலவாகும்.

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் கண்களையும் மனதையும் கொள்ளை கொள்ளும் பல சுற்றுலாத் தளங்கள் உள்ளன. சிங்கப்பூரில் பிரபலமாக உள்ள சுற்றுலா இடங்களில் இந்த Marina Bay Sands ரிசார்ட்டும் இடம்பிடித்துள்ளது. இந்த ரிசார்ட்டில் விலையுயர்ந்த ஹொட்டல்கள், விடுதிகள் மற்றும் எண்ணற்ற கடைகள் என சுற்றுலாவாசிகளை கவர்வதற்கென்றே அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகச்சிறந்த மழைக்காடுகள் பூங்காவில் விலங்கியல் பூங்காவாகும் ஒன்றாக விளங்குகிறது. மேலும், இந்த பூங்காவில் நைட் சஃபாரி எனப்படும் இரவு நேர பயணம் மிக அருமையாக இருக்கும். இதனை காண்பதற்காகவே ஆண்டுதோறும் பல்லாயிரம் சுற்றுலாவாசிகள் வந்து செல்கின்றனர்.

5 Countries near india open for tourism

மாலத்தீவு:

 மாலத்தீவு இந்திய பயணிகளுக்கு மிகவும் பிடித்த நாடுகளில் ஒன்றாகும். மிகவும் குட்டி நாடான மாலத்தீவு முழுக்க முழுக்க சுற்றுலாவையே நம்பி இருக்கிறது. மாலத்தீவின் தலைநகரான மேலில் இருக்கும் தேசிய அருங்காட்சியகம், ஹுல் ஹுமாலே தீவு போன்றவை சுற்றுலாப் பயணிகள் அதிகம் சுற்றிப்பார்க்கும் முக்கிய இடங்களாகும். மேலில் இருக்கும் வெள்ளி தொழுகை மசூதி உலகின் பழமையான மசூதிகளில் ஒன்று. மாலத்தீவின் அழகழகான கடற்கரைகள், நெஞ்சம் அள்ளும் இயற்கை காட்சிகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் வண்ணம் அமைந்துள்ளன. 


 

Follow Us:
Download App:
  • android
  • ios