Asianet News TamilAsianet News Tamil

நம்ப மாப்ள தானே.. மாலையில் இருந்து பணத்தை ஆட்டைய போட்ட நண்பர்... சிக்கியது எப்படி..?

மண மாலையில் இருந்து சில ரூபாய் நோட்டுக்களை உருவிக் கொண்டு, சட்டென தனது பாக்கெட்டிற்குள் அவற்றை திணித்துக் கொள்கிறார். 

Video Shows Friend Stealing Cash From Groom's Garland
Author
India, First Published Apr 9, 2022, 11:17 AM IST

நம்மை அதிர வைக்கும் காட்சிகள் அடங்கிய பரபர வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி வருகின்றன. இவை சமயங்களில் அதிர்ச்சியளிக்கும் விதமாகவும், பலமுறை சிரிப்பூட்டும் விதமாகவும் இருக்கும். இவ்வாறான வீடியோ ஒன்று தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

டுவிட்டரில் வைரல் ஆக பரவி வரும் வீடியோவில் நண்பர் ஒருவர் மாப்பிள்ளைக்கு அணிவிக்கப்பட்ட பண மாலையில் இருந்து ரூபாய் நோட்டுக்களை அலேக்காக அபேஸ் செய்யும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன.

திருமண நிகழ்வு:

தேதி மற்றும் இடம் குறிப்பிடப்படாத திருமண நிகழ்வு ஒன்றின் வீடியோ தான் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது> அதன்படி மாப்பிள்ளையை சுற்றி அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அமர்ந்து இருக்கின்றனர். மாப்பிள்ளைக்கு சிலர் தொடர்ந்து அட்வைஸ் கொடுத்து வருவதாக வீடியோவில் தெரிகிறது. அவற்றை ஏற்றுக் கொள்வதா, எதிர்த்து பதில் அளிப்பதா என தெரியாமல் மாப்பிள்ளை அங்கும் இங்குமாக பார்த்துக் கொண்டு அமர்ந்து இருக்கிறார். 

மாப்பிள்ளையின் நலம் விரும்பிகளில் சிலர் அவருக்கு பண மாலையை ஏற்கனவே அணிவித்து இருந்துள்ளனர். அந்த மாலையுடனேயே அவர் அமர்ந்து கொண்டு உரையாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது தான் மாப்பிள்ளையின் அருகில் அமர்ந்து இருந்தவர், அந்த வேலையை செய்யத் தொடங்கினார். 

வீடியோ:

அட்வைஸ் கச்சேரியில் மூழ்கி இருந்த கூட்டத்தின் மத்தியில் மாப்பிள்ளை சற்று கவனம் சிதறிய நேரத்தில், அருகில் அமர்ந்து கொண்டிருந்த நபர், மண மாலையில் இருந்து சில ரூபாய் நோட்டுக்களை உருவிக் கொண்டு, சட்டென தனது பாக்கெட்டிற்குள் அவற்றை திணித்துக் கொள்கிறார். இந்த சம்பவம் முழுக்க வீடியோவில் பதிவாகி வருவதை அந்த நபர் அறிந்திருக்கவில்லை. 

தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் வீடியோ பார்த்து, நெட்டிசன்கள் வீடியோவிற்கு மணி ஹெய்ஸ்ட், திஸ் இஸ் பிஸ்னஸ் என டிரெண்டிங் தலைப்புகளை வைத்து, மற்றவர்களுக்கும் பகிர்ந்து வருகின்றனர். இரு நாட்களுக்கு முன் வெளியான வீடியோ இதுவரை சுமார் 99 ஆயிரம் லைக்ஸ்க்களை பெற்று இருக்கிறது. 

வைரல் சம்பவங்கள்:

முன்னதாக சில வாரங்களுக்கு முன் மணப் பெண் ஒருவர் திருமணத்திற்கு முன் மோமோஸ்க்களை அவசர அவசரமாக உண்ணும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த வீடியோவை மணப் பெண்ணே தனது அக்கவுண்டில் வெளியிட்டு இருந்தார். 

அந்த வீடியோவில் மணப் பெண் முழு அலங்காரத்துடன், திருமணத்திற்கு தயார் நிலையில் இருந்த போது, தனக்கு மிகவும் பிடித்த மோமோக்களை ஒரு பிளேட் வாங்கி அப்படியே சாப்பிட்டு முடிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. மோமோ சாப்பிடுவதோடு, இடையில் மகிழ்ச்சியின் உச்சத்தில் சிறு நடன அசைவுகளையும் அந்த மணப் பெண் போட்டார். 

Follow Us:
Download App:
  • android
  • ios