Asianet News TamilAsianet News Tamil

UPSC Preliminary:அலர்ட்..! யு.பி.எஸ்.சி தேர்வு தேதி அறிவிப்பு..விண்ணப்பது எப்படி..? முக்கிய தகவல்கள் வெளியீடு

2022ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வுக்களுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ப்ரிளிமினரி அல்லது முதல்நிலை தேர்வுகள் வரும் ஜூன் 5 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளன.இதன்மூலம் இந்த ஆண்டில் மட்டும் சிவில் சர்வீஸ் பணியிடங்களில் 861 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 
 

UPSC  Preliminary exam date announced
Author
India, First Published Feb 3, 2022, 12:00 PM IST


2022ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வுக்களுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ப்ரிளிமினரி அல்லது முதல்நிலை தேர்வுகள் வரும் ஜூன் 5 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளன.இதன்மூலம் இந்த ஆண்டில் மட்டும் சிவில் சர்வீஸ் பணியிடங்களில் 861 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகம். கடந்த ஆண்டில் 712 காலிப் பணியிடங்கள் உண்டாகின. 2020ம் ஆண்டில் 796 காலிப் பணியிடங்களும், 2019ம் ஆண்டில் 896 காலிப்பணியிடங்களும், 2018ல் 782 காலிப் பணியிடங்களும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. வரும் பிப்ரவரி 22 ஆம் தேதிக்குள் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் upsc.gov.in அல்லது https://upsconline.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 22 இந்திய குடிமை பணிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் யு.பி.எஸ்.சி. தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு முதல்நிலை தேர்வு ஜூன் மாதம் 27ம் தேதி நடைபெற இருந்தது. கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக தேர்வுகள் அக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’தற்போது கொரோனா பரவல் இந்தியாவில் தீவிரமாக உள்ளதால் வரும் ஜூன் 27ம் தேதி நடைபெற இருந்த முதல்நிலை தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி நடத்தப்படும்’ என்று குறிப்பிடப்பட்டது. இந்த அறிவிப்பு தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அதேபோல் ஏற்கெனவே 2020 ஆண்டும் யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு மே மாதத்திற்கு பதிலாக அக்டோபர் மாதம் 4ம் தேதி நடத்தப்பட்டது. அதன்பிறகு இரண்டாவது முறையாக 2021 ஆண்டும் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெற்றது. இதனால் இந்த ஆண்டும் இதுபோல தேர்வு தள்ளிவைக்கப்படுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

2020ம் ஆண்டு தேர்வு தள்ளிப்போனதால் நேர்காணல் மிகக் காலதாமதமாக நடைபெற்றது. அதற்கான நேர்காணல் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க இருந்தது. எனினும் கொரோனா தொற்று அதிகரித்ததால் நேர்காணல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நேர்காணல் தேர்வுகள் அடுத்து ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறலாம் எனச் சொல்லப்பட்டது. இதுபோல இந்த ஆண்டுக்குமான நேர்காணல்களிலும் தாமதம் ஏற்படுமா என்கிற கேள்வியும் நிலவி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios