Asianet News TamilAsianet News Tamil

Tirupati temple: புது அறிவிப்பு..திருமலையில் இனி தனியார் உணவகங்கள் கிடையாது..அன்னபிரசாதம் மட்டுமே விநியோகம்..

திருமலை திருப்பதியில் இயங்கும் தனியார் உணவங்களை மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.அதற்கு பதிலாக தேவஸ்தானம் மூலம் திருமலையில் பல்வேறு இடங்களில் அன்னபிரசாதத்தை விநியோகிக்கச் சிறுகடைகளும் உணவகங்களும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

There are no more private restaurants in Thirumalai
Author
Andhra Pradesh, First Published Feb 20, 2022, 3:38 PM IST

திருமலை திருப்பதியில் இயங்கும் தனியார் உணவங்களை மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.அதற்கு பதிலாக தேவஸ்தானம் மூலம் திருமலையில் பல்வேறு இடங்களில் அன்னபிரசாதத்தை விநியோகிக்கச் சிறுகடைகளும் உணவகங்களும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 நிதியாண்டில் கோயில் நிர்வாகம் மற்றும் அது தொடர்பான செலவுகளுக்காக 3,096 கோடி ரூபாய் பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான ஒப்புதல் பெறும் கூட்டம் நடைபெற்றது.அதில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பரிந்துரையின்படி ஸ்ரீபத்மாவதி குழந்தைகள் மருத்துவமனையை 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கவும், தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் இலவச மருத்துவ சிகிச்சைக்கென ரூபாய் 25 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே தொடங்கப்பட்டிருக்கும் ‘ஸ்ரீநிவாச சேது’ எனப்படும் கருட வாரிதி மேம்பாலப்பணிக்கு மேலும் 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்தப் பணி வரும் டிசம்பர் மாதம் முடிவடையும் என்று தெரிவித்துள்ளனர்.இதுபோன்று பல்வேறு நலத்திட்டங்களை 3,096 கோடி ரூபாய்க்குச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.அதன் ஒருபகுதியாக திருமலை திருப்பதியில் இயங்கும் தனியார் உணவங்களை மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதற்கு பதிலாக தேவஸ்தானம் மூலம் திருமலையில் பல்வேறு இடங்களில் அன்னபிரசாதத்தை விநியோகிக்கச் சிறுகடைகளும் உணவகங்களும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனி திருப்பதியில் உணவு, விற்பனைப் பொருளாக இருக்காது என்றும் அனைவருக்கும் உரிமையானதாக விளங்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் ஹோட்டல்களுக்கான ஓர் ஆண்டு உரிமக் கட்டணமாக வசூலிக்கப்படும் 40 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படும் என்றாலும் அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று விளக்கப்பட்டுள்ளது.

இதுவரை திருமலையில் உணவங்களை நடத்தி வருபவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் பிற தொழில்களை நடத்த விரும்பினால் அதற்கு ஆய்வு செய்யப்பட்டு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதற்காகக் கடந்த 18-ம் தேதி அன்னதானக் கூடம் மற்றும் தனியார் உணவகங்களை தேவஸ்தானத்தின் தலைவர் சுப்பா ரெட்டி ஆய்வு செய்தார்.அதேபோன்று 2020 மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்ட ஆர்ஜித சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios