Asianet News TamilAsianet News Tamil

வேன் - லாரி நேருக்கு நேர் மோதல்.. 9 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு.. நிவாரணம் அறிவித்த பிரதமர்

இந்த கோர விபத்தில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 9 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுப்படுகிறது.  

Telangana lorry, van collide...9 people killed
Author
Telangana, First Published May 9, 2022, 11:08 AM IST

தெலங்கானாவில் வேன் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேன் - லாரி நேருக்கு நேர் மோதல்

தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் பிட்லம் பகுதியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எல்லாரெட்டியில் இருந்து  30 பேர் மினி வேனில் சென்றுக் கொண்டிருந்தனர். ஒருவழி நெடுஞ்சாலையில் வேன் சென்றுக் கொண்டிருந்தபோது, எதிரே வேகமாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் வேன் மீது மோதியது. 

Telangana lorry, van collide...9 people killed

9 பேர் பலி

இந்த கோர விபத்தில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 9 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுப்படுகிறது.  இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Telangana lorry, van collide...9 people killed

பிரதமர் மோடி இரங்கல்

இந்த விபத்து தொடர்பாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios