Asianet News TamilAsianet News Tamil

Swami Sivananda: 125 வயதில் காலில் விழுந்த யோகா குரு-தரையை தொட்டு வணங்கிய பிரதமர்-விழாவில் நெகிழ்ச்சி சம்பவம்

Swami Sivananda: கடந்த 50 ஆண்டுகளாக சுவாமி சிவானந்தா பூரியில் வசிக்கும் தொழுநோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு உதவி வருகிறார்

Swami Sivananda, 125 Years Old, Receives Padma Shri For Yoga
Author
India, First Published Mar 22, 2022, 12:01 PM IST

டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. பல துறைகளில் சாதனை படைத்தோருக்கு இந்த விழாவில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் 125 வயதான சுவாமி சிவானந்தாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரப்படுத்தியது. 

வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து இருந்த நிலையில், விருதை பெற்றுக் கொள்ள அழைக்கப்பட்டதும், சுவாமி சிவானந்தா வெறும் கால்களுடன் விருது வழங்கும் மேடையை நோக்கி கம்பீரமாக நடந்து சென்றார். வழியில் பிரதமர் மோடியை பார்த்தும், தரையில் முழங்காலிட்டு வணக்கம் செலுத்தினார். இதை பார்த்து அதிர்ந்து போன பிரதமர் மோடி, பட்டென எழுந்து நின்று தரையில் தனது கைகளை தொட்டு இருமுறை வணங்கினார். 

Swami Sivananda, 125 Years Old, Receives Padma Shri For Yoga

பிரதமருக்கு வணக்கம் செலுத்தியதும், குடியரசு தலைவரை நோக்கி நகர்ந்த சிவானந்தா இருமுறை முழங்காலிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தனது வணக்கத்தை தெரிவித்தார். வணக்கம் செலுத்துவதை பார்த்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் எழுந்து வந்து சிவானந்தாவை கீழ் இருந்து மேலே எழுப்பி அவரிடம் பத்மஸ்ரீ விருதை வழங்கினார். 

குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த இந்த சம்பவம் அங்கு கூடி இருந்தவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவரின் செயலுக்கு அங்கு இருந்த அனைவரும் கைகளை தட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிவானந்தாவின் செயலுக்கு எழுந்த கைத் தட்டல்களால் அந்த அரங்கமே அதிரந்து போனது. இந்த சம்பவங்கள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. 

Swami Sivananda, 125 Years Old, Receives Padma Shri For Yoga

 

மனத குலத்திற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த சுவாமி சிவானந்தா, மிகவும் எளிய வாழ்க்கையை நடத்தி வருகிறார். தினமும் யோகா பயிற்சி செய்து வரும் சிவானந்தா, துளி எண்ணெய் சேர்க்காமல் வேக வைத்த உணவு வகைகளையே எடுத்துக் கொள்கிறார். இந்த வயதிலும் ஆரோக்கியமாக வாழும் சிவானந்தா மற்றவர்களுக்கும் மிகச் சிறந்த உதாரணம் எனலாம். 

சுவாமி சிவானந்தா ஆகஸட் 8, 1896 ஆண்டு இந்தியாவுடன் இருந்த வங்கதேசத்தின் சில்ஹெட் மாவட்டத்தில் பிறந்தார். இவரின் ஆறு வயதிலேயே தாய் மற்றும் தந்தையை சுவாமி சிவானந்தா இழந்து விட்டார். மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், தனது சிறுவயது முதல் சிவானந்தா அரிசி கஞ்சியை மட்டுமே உணவாக எடுத்து வருகிறார். பெற்றோர் மறைவுக்கு பின் சிவானந்தா மேற்கு வங்கத்தின் நபாக்விப் பகுதியில் உள்ள குருஜி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டார். 

 

இவரை குரு ஓம்காரனந்தா கோஸ்வாமி தான் வளர்த்தார். பள்ளி கல்விக்கு பதில் சிவான்தாவுக்கு ஆன்மீக கல்வி மற்றும் யோகா பயிற்சியை குரு ஓம்காரனந்தா கோஸ்வாமி வழங்கினார். தன் வாழ்நாள் முழுக்க இவர் நல்லதையே நினைக்கும் நபராக வாழ்ந்து வருகிறார். "இந்த உலகமே என் வீடு, இங்குள்ள மக்கள் தான் எனது தாய் மற்றும் தந்தையர்கள். இவர்கள் மீது அன்பு செலுத்துவது அவர்களுக்காக வாழ்வது தான் என மதம்," எனும் நம்பிக்கையை சுவாமி சிவானந்தா பின்பற்றி வருகிறார். 

இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளான வாரணாசி, பூரி, ஹரித்வார், நபாத்விப் போன்ற இடங்களை சேர்ந்த ஏழை எளியோருக்கு சேவையாற்றும் இலக்கை நோக்கி சிவானந்தா தனது வாழ்க்கை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த 50 ஆண்டுகளாக சுவாமி சிவானந்தா பூரியில் வசிக்கும் தொழுநோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு தொண்டாற்றி வருகிறார். 

Follow Us:
Download App:
  • android
  • ios