Asianet News TamilAsianet News Tamil

BREAKING: ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடையா? விலக்கா.? உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு!

ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கி தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

Supreme Court refuses to ban jallikattu competition
Author
First Published May 18, 2023, 11:21 AM IST

ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கி தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு சட்டத்தை கொண்டு வந்தன. இந்த சட்டங்களுக்கு எதிராகவும், விலங்குகளை மையமாகக் கொண்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

Supreme Court refuses to ban jallikattu competition

இந்த வழக்கு நீதிபதிகள் கே.எம். ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை கடந்த டிசம்பர் 8ம் தேதி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Supreme Court refuses to ban jallikattu competition

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டம் செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டு கலாச்சாரத்தின் ஒரு பகுதி. ஜல்லிக்கட்டு கலாச்சார நிகழ்வு இல்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. 

Supreme Court refuses to ban jallikattu competition

ஜல்லிக்கட்டு  கலாச்சார நிகழ்வா என்பதை மாநில அரசின் சட்டமே தீர்மானிக்கும். தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்தின் மூலம் காளைகள் துன்புறுத்தப்படுவது பெருமளவு குறைந்துள்ளது. 100 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் திருப்தியாக உள்ளது. கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்று அரசு சட்டம் இயற்றி உள்ள நிலையில் நீதிமன்றம் அதில் தலையிட முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அவசர சட்டத்துக்கு தடை கோரிய பீட்டா உள்ளிட்ட அமைப்புகளின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios