Asianet News TamilAsianet News Tamil

பசங்களுக்கு லீவு விட போறாங்க.. கூடுதலாக தரிசன டிக்கெட்டுகள் வெளியிடுங்க.. பக்தர்கள் கோரிக்கை..!

திருப்பதி ஏழுமலையான் கோயில் உலக பிரசித்தி பெற்ற கோவில்களாம். தினமும் லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக திருப்பதி தேவஸ்தானம் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆன்லைனில் ரூ.300 தரிசன டிக்கெட் வெளியிட்டு வருகிறது.

sudden request by devotees to Tirupati Devasthanams
Author
First Published Feb 27, 2023, 12:48 PM IST

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறை வர உள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் தரிசன டிக்கெட் கூடுதலாக விநியோகிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தின் திருப்பதி ஊரில் இத்தலம் அமைந்துள்ளது. சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழந்த இடத்தில் இருப்பதால் இத்தலம் ஏழுமலை என்றும், இத்தலத்தின் மூலவர் ஏழுமலையான் என்றும் அழைக்கப்படுகிறது. 

sudden request by devotees to Tirupati Devasthanams

இந்த திருப்பதி ஏழுமலையான் கோயில் உலக பிரசித்தி பெற்ற கோவில்களாம். தினமும் லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக திருப்பதி தேவஸ்தானம் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆன்லைனில் ரூ.300 தரிசன டிக்கெட் வெளியிட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சிறப்பு நுழைவு தரிசனம், ஸ்ரீ வாணி அறக்கட்டளை, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், இலவச தரிசனம் வழங்கப்படுகிறது.

sudden request by devotees to Tirupati Devasthanams

அந்த வகையில் நேற்று காலை 10 மணிக்கு மார்ச் மாதம் வழிபடுவதற்கு தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் ஆன்லைனில் வெளியிட்டது. வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் மொத்த டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன. இந்நிலையில், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறை வர உள்ளதால் தரிசன டிக்கெட் கூடுதலாக விநியோகிக்க வேண்டும் என திருப்பதி தேஸ்வானத்திற்கு பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios