Asianet News TamilAsianet News Tamil

Rajasthan Congress: மாநிலங்களவை தேர்தல்.. கூவத்தூர் பாணியை கையில் எடுத்த காங்கிரஸ்...!

Congress to shift party MLAs to Udaipur hotel ahead of Rajya Sabha Polls: ஜெய்பூரின் கிளார்க் ஓட்டலில் நடைபெற்று வரும் பயிற்சி முகாம் நிறைவு பெற்றதும், சட்டமன்ற உறுப்பினர்கள் உதய்பூர் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

Rajasthan Congress to shift MLAs to hotel in Udaipur ahead of RS polls on June 10
Author
Rajasthan, First Published Jun 2, 2022, 11:42 AM IST

ராஜஸ்தானில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை உதய்பூரில் உள்ள தங்கும் விடுத்திக்கு அழைத்துச் செல்ல காங்கிரஸ் கட்சி முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் 10 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க. அபகறித்து விடலாம் என்ற காரணத்தால் காங்கிரஸ் கட்சி இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது.  

அதன்படி காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் உதய்பூரில் உள்ள அரவள்ளி தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்லப் பட உள்ளதாக கூறப்படுகிறது. இன்று (ஜூன் 2) ஜெய்பூரின் கிளார்க் ஓட்டலில் நடைபெற்று வரும் பயிற்சி முகாம் நிறைவு பெற்றதும், சட்டமன்ற உறுப்பினர்கள் உதய்பூர் அழைத்துச் செல்லப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

உதய்பூர் தங்கும் விடுதி:

சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள், இதர கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக உள்ளவர்களும் உதய்பூருக்கு மாற்றப்பட உள்ளனர். சூர்யகர் பகுதியில் உள்ள ஜெய்சல்மீரில் 40 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஹரியானா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் ஜெய்ப்பூர் அழைத்து செல்லப்படுகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Rajasthan Congress to shift MLAs to hotel in Udaipur ahead of RS polls on June 10

ஹிராயானாவில் மூத்த காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கன் போட்டியிடுகிறார். தனித்தனி வாக்கெடுப்பு காரணமாக சிறிதளவு அசௌகரிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. பா.ஜ.க. கட்சியும் தனது சட்டமன்ற உறுப்பினர்களை ஓட்டலுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளது. பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை அழைத்துச் செல்லப்பட உள்ளனர். 

கடுமையான போட்டி:

மாநிலத்தில் 108 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஜூன் 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை தேர்தலில் நான்கில் இரண்டு இடங்களில் நிச்சயம் வெற்றி பெறும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலோட் தெரிவித்து உள்ளார். இரு இடங்களில் வெற்றி பெறும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 26 வாக்குகள் தேவைக்கு அதிகமாக இருக்கும். மூன்றாவது இடத்தை பிடிப்பதற்கு 41 வாக்குகளை தேவைப்படும் நிலையில், 15 வாக்குகள் குறைவாக கொண்டுள்ளது.

மறுமுனையில் பா.ஜ.க. 71 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது. இதன் மூலம் ஒரு இடத்தில் பா.ஜ.க. வெற்றி பெற முடியும். இதை அடுத்து பா.ஜ.க.விடம் 30 வாக்குகள் தேவைக்கு அதிகமாக இருக்கும். கடந்த செவ்வாய் கிழமை முதலமைச்சர் அசோல் கெலோட், காங்கிரஸ் வேட்பாளர்கள் ராஜஸ்தானில் உள்ள 13 சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios