Asianet News TamilAsianet News Tamil

இந்தி மொழியில் வரவேற்பு... சிறுவனிடம் வியந்து பேசிய பிரமதர் மோடி... டோக்கியோவில் நெகிழ்ச்சி..!

ஜப்பானில் உள்ள இந்திய வம்சாவெளியினர் எனக்கு அளித்த உற்சாக வரவேற்புக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

 

PM Amazed By Japanese Boys Hindi Greeting
Author
India, First Published May 23, 2022, 12:15 PM IST

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்று இருக்கிறார். குவாட் மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்று இருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு டோக்கியோ விமான நிலையத்தில் கூடி இருந்த இந்திய வம்சாவெளியிர் மற்றும் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

அப்போது பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க சிறுவர்களும் அங்கு வந்திருந்தனர். அவ்வாறு அங்கு வந்திருந்த சிறுவர்களில், ரிட்சுகி கோபயாஷி பிரதமர் நரேந்திர மோடியிடம், “ஜப்பானுக்கு வரவேற்கிறோம், தயவு செய்து எனக்காக உங்களின் கையெழுத்தை போட முடியுமா?,” என இந்தி மொழியில் கேட்டான். ஜப்பானில் இந்தி மொழி கேட்டதும் உற்சாகம் அடைந்த பிரதமர் நரேந்திர மோடி, “ப்பா... இந்தி மொழியை எங்கு இருந்து கற்றுக் கொண்டாய்?.... உனக்கு இந்தி மொழி நன்கு தெரிந்து இருக்கும் போல் தெரிகிறதே?” என பதில் அளித்தார்.

PM Amazed By Japanese Boys Hindi Greeting

இந்தி மொழி தெரியாது:

“...எனக்கு இந்தி அந்த அளவுக்கு அதிகமாக தெரியாது, ஆனால் என்னால் புரிந்து கொள்ள முடியும்.. பிரதமர் எனது தகவலை படித்தார், நான் அவரிடம் இருந்து கையெழுத்தை பெற்றுக் கொண்டேன், இதனால் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது...,” என ரிட்சுகி கோபயாஷி தெரிவித்தார். 

ரிட்சுகி கோபயாஷி மட்டும் இன்றி ஏராளமான சிறுவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க விமான நிலையத்தில் கூடி இருந்தனர். அனைவரின் கைகளிலும் வரவேற்பு பதாகைகள் இருந்தன. அவை வெவ்வேறு இந்திய மொழிகளில் வரவேற்பு தகவல்கள் எழுதப்பட்டு இருந்தது. மேலும் பலர் இந்தியாவின் பாரம்பரிய உடைகளை அணிந்து இருந்தனர். 

உற்சாக வரவேற்பு:

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா விடுத்த அழைப்பை ஏற்று, நாளை (மே 24 ஆம் தேதி) நடைபெற இருக்கும் குவாட் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோ சென்று இருக்கிறார். 

“ஜப்பானில் உள்ள இந்திய வம்சாவெளியினர் பல்வேறு துறைகளில் சிறந்து செயல்பட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் இந்திய தொடர்பை மேலும் இறுக்கமாக வலுப்படுத்தி இருக்கின்றனர். ஜப்பானில் உள்ள இந்திய வம்சாவெளியினர் எனக்கு அளித்த உற்சாக வரவேற்புக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்,” என பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். 

Follow Us:
Download App:
  • android
  • ios