Asianet News TamilAsianet News Tamil

வாகன ஓட்டிகளே உஷார்..! பெட்ரோல், டீசல் விலை உயரப்போகிறது.. எப்போது தெரியுமா ?

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் பங்கு சந்தைகள், எண்ணெய் வித்துகளின் விலை உயர்ந்தது. கச்சா எண்ணெயின் விலை உயர்ந்த போதிலும் பெட்ரோல் டீசல் விலையில் இன்று வரை மாற்றமில்லாமல் உள்ளது.

Petrol and diesel prices are hike soon in india next week after reason ukraine russian war
Author
India, First Published Mar 6, 2022, 12:01 PM IST

கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக விலை உயர்ந்தது ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாயை எட்டியது. எதிர்கட்சியினரின் போராட்டம், பீகார் மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மீண்டும் மெதுவாக உயர்ந்தது.

இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 23 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 120 நாட்களுக்கு மேலாக இந்தியாவில் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இன்றி காணப்பட்டது. உக்ரைன் ரஷ்யா போர் எதிரொலியாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது. 

Petrol and diesel prices are hike soon in india next week after reason ukraine russian war

ஆனால் இந்தியாவில் 5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க படாமல் இருந்து வந்தது. நாளை 5 மாநில தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே நாளை மறுநாள் முதல் பெட்ரோல், டீசல் விலை எகிறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இன்னும் ஒரு வாரத்திற்குள் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் முதல் 23 ரூபாய் வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தை நிலவரத்திற்கேற்ப மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios