Asianet News TamilAsianet News Tamil

rahul gandhi: .ராகுல் காந்திக்கு அமலாக்கப்பிரிவு மீண்டும் நோட்டீஸ்: 13ம் தேதி ஆஜராக உத்தரவு

National Herald Case :நேஷனல் ஹெரால்டு நாளேடு வழக்கில் சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 13ம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

National Herald Case: Enforcement Directorate issues fresh summons to Rahul Gandhi, asks him to appear on June 13
Author
New Delhi, First Published Jun 3, 2022, 11:32 AM IST

நேஷனல் ஹெரால்டு நாளேடு வழக்கில் சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 13ம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

National Herald Case: Enforcement Directorate issues fresh summons to Rahul Gandhi, asks him to appear on June 13

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனம் மூலம், நேஷனல் ஹெரால்டு என்ற நாளேடு தொடங்கப்பட்டது. இந்தநிறுவனத்தை நடத்த ரூ.90 கோடியை காங்கிரஸ் கட்சி கடனாகக் கொடுத்தது. இந்த கடனை திருப்பிச் செலுத்தாமல் நேஷனல் ஹெரால்ட் நிறுவனம் நஷ்டப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு நாளேடு நிறுத்தப்பட்டது. பின்னர் 2016ம் ஆண்டு முதல் நேஷனல் ஹெரால்ட் நாளேடு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் பங்குகளை ரூ.50 லட்சத்துக்கு யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டபோது, அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர்களின் ஒப்புதல்களைப் பெறவில்லை. இந்த நிறுவனத்தின் 76% பங்குகள் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடமும், 24 % பங்குகள் ராகுல் காந்தியிடமும் உள்ளன. 

National Herald Case: Enforcement Directorate issues fresh summons to Rahul Gandhi, asks him to appear on June 13

ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள அசோசியேட்டட் ஜர்னல் பங்குகளை வெறும் ரூ.50 லட்சத்துக்கு மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி  வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, எம்.பி.ராகுல் காந்திக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியி இருந்தனர். அந்த நோட்டீஸில் ஜூன் 2ம் தேதி ராகுல் காந்தி நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி கோரப்பட்டிருந்தது.

ஆனால், ராகுல் காந்தி அமலாக்கப்பிரிவுக்கு எழுதிய கடிதத்தில், தான் தற்போது வெளிநாட்டில் இருப்பதால், வரும் 5ம் தேதிக்கு மேல்தான் தாயகம் திரும்புவதால், அதன்பின் ஆஜராகிறேன். அதற்கு புதிய தேதியை அறிவிக்கும்படி கோரியிருந்தார். 
இதையடுத்து, சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வரும் 13ம் தேதி நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

National Herald Case: Enforcement Directorate issues fresh summons to Rahul Gandhi, asks him to appear on June 13

இதற்கிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, வரும் 8ம் தேதி நேரில் அமலாக்கப்பிரிவு தலைமை அலுவலகத்தில் ஆஜராகக் கோரப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios