Asianet News TamilAsianet News Tamil

முஸ்லீம் பழ கடைகளை சூரையாடிய இந்து அமைப்பு... கர்நாடகாவில் பரபரப்பு...!

மேலும் அவர்களின் தள்ளு வண்டி கடைகளையும் சூரையாடினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Muslim traders carts outside temple vandalised in Karnatakas Dharwad
Author
India, First Published Apr 10, 2022, 11:57 AM IST

கர்நாடக மாநிலத்தின் தார்வாட் மாவட்டத்தில் உள்ள நகிகேரி அனுமன் கோயில் வாயிலில் தள்ளு வண்டியில் கடை விரித்து பொருட்களை வியாபாரம் செய்து வந்த முஸ்லீம்களை இந்து அமைப்பான ஸ்ரீ ராம் சேனாவை சேர்ந்த சிலர் கடுமையாக தாக்கினர். மேலும் அவர்களின் தள்ளு வண்டி கடைகளையும் சூரையாடினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதிப்பு:

மேலும் கடை சூரையாடப்பட்டத்தில் தர்பூசனி பழங்கள் கீழே விழுந்து நசுங்கி வீணாகி போனதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை பார்த்து முஸ்லீம் வியாபாரி ஒருவர் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கோயில்களில் முஸ்லீம்கள் கடை வைக்க கூடாது என சிலர் வலியுறுத்தி வருவதை அடுத்து இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

15 நாட்களுக்கு முன்னரே கோயில் வாசலில் கடை நடத்தி வரும் முஸ்லீம்களை அங்கிருந்து காலி செய்ய கோயில் நிர்வாகத்திடம் இந்து அமைப்பு வலியுறுத்தியதோடு, கெடுவும் விடுத்து இருந்ததாக கூறப்படுகிறது. எனினும், கோயில் நிர்வாகிகள் இவ்வாறு செய்யவில்லை. இதை அடுத்து கோயிலுக்கு வந்த இந்து அமைப்பு அங்கிருந்த முஸ்லீம்களின் கடைகளை சூரையாடினர். 

உத்தரவு:

"கடந்த 15 ஆண்டுகளாக இதே பகுதியில் கடை நடத்தி வருகிறேன், ஆனால் யாரும் என்னை இங்கிருந்து காலி செய்ய கூறவில்லை," என அங்கு கடை நடத்தி வந்த முஸிலீம் நபரான நபிசாப் தனியார் செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்தார். "கோயில் வாயிலில் வியாபாரம் நடத்துவோரில் பெரும்பாலானோர் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் தான். இதுதவிர மிகவும் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கும் கோயில் வாயிலில் கடை நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது," என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios