டெல்லி மாநகராட்சிக் கூட்டத்தில் நேற்று ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்களும், பாஜக கவுன்சிலர்களும் அடிதடியில் ஈடுபட்டதால் மீன் மார்க்கெட் போல் ஆனது.

டெல்லி மாநகராட்சிக் கூட்டத்தில் நேற்று ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்களும், பாஜக கவுன்சிலர்களும் அடிதடியில் ஈடுபட்டதால் மீன் மார்க்கெட் போல் ஆனது.

ஆம் ஆத்மியைச் சேர்ந்த டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய், தன்னை கொலை செய்யும் அளவுக்கு பாஜக கவுன்சிலர்கள் தாக்க வந்தனர் என்று போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.

IPS அதிகாரி ரூபா-வுக்கு பெங்களூரு நீதிமன்றம் கட்டுப்பாடு| IAS அதிகாரி ரோஹினி-க்கு நிம்மதி

டெல்லி மாநாகராட்சியில் மொத்தம் உள்ள 260 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 134 உறுப்பினர்களுடன் பெரும்பான்மையாக இருக்கிறது. 2வது இடத்தில் 109 உறுப்பினர்களுடன் பாஜக2வது இடத்தில் இருக்கிறது.

Scroll to load tweet…

டெல்லி மேயரைத் தேர்ந்தெடுப்பதற்காக நேற்றுமுன்தினம் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்று புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் ரேஹா குப்தாவைவிட 34 வாக்குகள் கூடுதலாக ஷெல்லி ஓபராய் பெற்று வாகை சூடினார்.

இந்நிலையில் மாநகராட்சியின் நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யும் தேர்தல் நேற்று டெல்லி மாநகராட்சி அவையில் நடந்தது. தேர்தல் முடிவுகளை மேயர் ஷெல்லி ஓபராய் அறிவித்ததும். பாஜக கவுன்சிலர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கோஷமிட்டனர், பதிலுக்கு ஆம் ஆத்மி கவுன்சிலர்களும் கோஷமிட்டனர்.

சிறிது நேரத்தில் பாஜக, ஆம் ஆத்மி கவுன்சிலர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு, அடிதடியில் இறங்கினர். மாநாகராட்சி சபை, மீன்மார்க்கெட் போல், களேபரமாகி, அடிதடி நடக்கும் இடமாக மாறியது. வாக்குச்சீட்டுகளைக் கிழித்தும், ஆவணங்களை வீசி எறிந்தும்,மேஜையின் மீது ஏறி நின்றும் இரு கட்சியின் கவுன்சிலர்களும் ரகளையிலும், அடிதடியிலும் ஈடுபட்டனர்.

ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கோல்ஸ் டெல்லி வந்தார்: பிரதமர் மோடியுடன் சந்திப்பில் முக்கிய உடன்பாடு

இரு கட்சிகளின் பெண் கவுன்சிலர்களும் தாங்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல்,ஆண்களுடன் மல்லுக்கு நின்றனர். சில பெண் கவுன்சிலர்கள் ஆண் கவுன்சிலர்களை தாக்கிய சம்பவமும் நடந்தது.

இதையடுத்து, மாநாகராட்சி நிலைக்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் 27ம் தேதி காலை 11 மணிக்கு நடத்தப்படும் எனக் கூறி அவையை என்று மேயர் ஷெல்லி ஓபராய் ஒத்தி வைத்தார்

மேயர் ஷெல்ல ஓபராய் நிருபர்களிடம் கூறுகையில் “நான் முடிவுகளை அறிவிக்கத் தொடங்கியதும், பாஜக கவுன்சிலர்கள் என்னை நாற்காலியில் இருந்து தள்ளிவிட்டு, தாக்கினர். பாஜக கவுன்சிலர்கள் ரவி நெகி, அர்ஜூன் மார்வா, சந்தன் சவுத்ரி ஆகியோர் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் தாக்கினர். வாக்குச்சீட்டுகளை கழித்த பாஜக கவுன்சிலர்கள் பொறுப்பில்லாமல் நடந்தனர். இதனால் வரும் 27ம் தேதி புதிதாக நிலைக்குழு உறுப்பினர்களுக்காகத் தேர்தல் நடத்தப்படும்

Scroll to load tweet…

டெல்லி மாநகராட்சி சபையிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாவிட்டால், டெல்லியில் எவ்வாறு பெண்கள் பாதுகாப்புடன் இருப்பார்கள். பாஜக கவுன்சிலர்கள் 3 பேர் மீது நான் புகார் அளிக்க இருக்கிறேன், போலீஸ்பாதுகாப்பு கோர உள்ளேன்.

மாநகராட்சித் தேர்தலில் தோல்வியை பாஜகவினர் ஏற்க வேண்டும். வன்முறையில் ஈடுபட்டு பின்பக்க கதவுகள்வழியாக வர முயலக் கூடாது” எனத் தெரிவித்தார்

ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் டெல்லி கமலா மார்க்கெட் காவல்நிலையம் முன்பு நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Scroll to load tweet…

ஆம்ஆத்மி கவுன்சிலர்கள், பாஜக கவுன்சிலர்கள் இருதரப்பும் மாறி,மாறி டெல்லி போலிஸில் புகார் அளித்தனர். இருதரப்பு புகாரையும் பதிவு செய்த டெல்லி போலீஸார் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தனர்.