Asianet News TamilAsianet News Tamil

Praveen Kumar: மகாபாரத பீமன்.. தடகளப் போட்டிகளில் தங்க வென்ற நடிகர் பிரவீன் குமார் மாரடைப்பால் காலமானார்.!

நடிகரும், ஆசிய தடகளப் போட்டிகளில் தங்க மற்றும் அர்ஜுனா விருது வென்ற விளையாட்டு வீரருமான பிரவீன் குமார் சோப்தி (74) மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் உடல் நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

Mahabharat Bheem Praveen Kumar Sobti passes away
Author
Delhi, First Published Feb 8, 2022, 12:23 PM IST

தூர்தர்ஷன் மகாபாரதம் தொடரில் பீமன் கதாப்பாத்திரத்தில் நடித்து அழியாப்புகழ் பெற்றவரும், ஆசிய தடகளப் போட்டிகளில் இந்தியாவுக்கு இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்றவருமான பிரவீன் குமார் சோப்டி மாரடைப்பால் காலமானார்.

நடிகரும், ஆசிய தடகளப் போட்டிகளில் தங்க மற்றும் அர்ஜுனா விருது வென்ற விளையாட்டு வீரருமான பிரவீன் குமார் சோப்தி (74) மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் உடல் நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

Mahabharat Bheem Praveen Kumar Sobti passes away

பி.ஆர். சோப்ராவின் மகாபாரத சீரியலில் பீமனாக நடித்த பிரவீன் குமார் சோப்தி சர்வதேச அளவில் புகழ் அடைந்தார். அந்த தொடருக்கு பிறகு பல திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.  இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் கிரேசி மோகன் எழுத்தில் உருவான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பாடிகார்ட் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 

Mahabharat Bheem Praveen Kumar Sobti passes away

பழம்பெரும் நடிகர் பிரவீன் குமார் சோப்தி மறைவை அறிந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல மகாபாரத தொடர் மூலம் அவருக்கு ரசிகரான பலரும் பிரவீன் குமார் சோப்தியின் மறைவை அறிந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவில் இருந்து மீளா துயத்தில் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு பிரவீன் குமார் சோப்தி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios