Asianet News TamilAsianet News Tamil

Russia Ukrain Crisis:உக்ரைன்-ரஷ்யா போர்: இந்தியாவில் விலை உயரக்கூடிய வாய்ப்புள்ள பொருட்கள் என்ன?

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால்,அடுத்துவரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதன் சங்கிலித் தொடர்ச்சியாக அடுத்துவரும் நாட்களில் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசலோடு தொடர்புடைய பல்வேறு பொருட்கள் விலையும் இந்தியாவில் உயரக்கூடும் எனத் தெரிகிறது

List of things that might get costlier in India amid tensions
Author
New Delhi, First Published Feb 24, 2022, 11:53 AM IST

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால்,அடுத்துவரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதன் சங்கிலித் தொடர்ச்சியாக அடுத்துவரும் நாட்களில் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசலோடு தொடர்புடைய பல்வேறு பொருட்கள் விலையும் இந்தியாவில் உயரக்கூடும் எனத் தெரிகிறது

உக்ரைன் மீது இன்று காலை ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டதும்,  பிரண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 102 டாலராக 4 % அளவு உயர்ந்தது. கடந்த 2014ம் ஆண்டுக்குப்பின் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் அதிகமாகி இருப்பது இதுதான் முதல்முறையாகும்.

List of things that might get costlier in India amid tensions

உக்ரைன், ரஷ்யா இடையே நடக்கும்போர் இரு நாடுகளுக்கு மட்டும் பாதிப்பைத் தராது, உலகமயமாக்கல் சூழலில், தடையில்லா பொருளாதாரத்தை பெரும்பாலான நாடுகள் இருப்பதால், இரு நாடுகளின் பிரச்சினை, அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளையும் மறைமுகமாக பாதிக்கும்.

வட்டிவீதம் உயரலாம்

குறிப்பாக இந்தியாவில் இனிவரும் நாட்களில் பல்வேறு வகையான பொருட்களின் விலையும் உயரக்கூடும். ஏற்கெனவே சில்லரை பணவீக்கம் 6 சதவீதத்துக்கு மேல் இருக்கும்போது, அடுத்துவரும் விலை ஏற்றத்தால், பணவீக்கம் அடுத்துவரும் மாதங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது
பணவீக்கம் அதிகரிக்கும்போது, அதைக் கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க  வேண்டியதிருக்கும். இதனால், ரிசர்வ் வங்கி அடுத்து நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் கடனுக்காக வட்டியை உயர்த்தும் ஆபத்தும் இருக்கிறது.

List of things that might get costlier in India amid tensions

பெட்ரோல் டீசல் விலை

குறிப்பாக கச்சா எண்ணெய் தேவையில் இந்தியா 25 சதவீதத்தை இறக்குமதி மூலம்தான் பெறுகிறது. ஆனால், தற்போது பிரன்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த 7 ஆண்டுகளில் முதல்முறையாக பேரல் 100 டாலரைக் கடந்துள்ளது. இந்த விலை உயர்வு நிச்சயம் பெட்ரோல், டீசல் விலையில் எதிரொலிக்க அதிகமான வாய்ப்புள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் எண்ணெய் நிறுவனங்கள் உள்ளன. 5 மாநிலத் தேர்தல் வரும் மார்ச் 7ம் தேதி முடிவதால், அதன்பின் பெட்ரோல், டீசல்விலை மிகப்பெரிய உயர்வை நோக்கி நகரும் என எதிர்பார்க்கலாம் என சந்தை வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்

List of things that might get costlier in India amid tensions

கோதுமை விலை

இந்தியாவில் மக்களால் அதிகம் நுகரப்படுவது கோதுமையாகும்.உலகளவில் கோதுமையை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடாக ரஷ்யா இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் உக்ரைனும் உலகிலேயே 4-வது பெரிய கோதுமை ஏற்றுமதி நாடாகி உள்ளது. கருங்கடல் பகுதியிலிருக்கும் நாடுகளில் இருந்துதான் அதிகமான கோதுமை உலக நாடுகளுக்குசப்ளை செய்யப்படுகிறது. உக்ரைன் ரஷ்யா போரால், இனிவரும் நாட்களில் கோதுமை விலையும் உயரக்கூடும். மத்திய அரசின் வசம் அதிகமான இருப்பு இருக்கும் பட்சத்தில் விலை உயர்வைப் பற்றி கருதத்தேவையில்லை. ஆனால், தனியார் நிறுவனங்கள் இறக்குமதி நம்பியிருக்கும்போது, விலை உயர்வை சந்திக்க வேண்டியதிருக்கும்

List of things that might get costlier in India amid tensions

உலோகம் விலை

பலாடியம் எனும் உலோகத்தை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடு ரஷ்யா. இந்த பொருள் மொபைல் போன் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வக்கிறது. தற்போது ரஷ்யா-உக்ரைன் ஏற்பட்டிருப்பதால், இந்த பலாடியம் ஏற்றுமதியில் பெரிய பாதிப்பு ஏற்படலாம். அதுமட்டுமல்லாமல் ரஷ்யா மீது விதிக்கப்பட்டபல்வேறு தடைகள் காரணமாக பலாடியத்தை ஏற்றுமதி செய்வதிலும் சிக்கல் இருக்கிறது. இதனால், மொபைல் போன்கள் தயாரிப்புச் செலவு அதிகரிக்கும்போது, அதன்விலையும் வருங்காலத்தில் உயரக்கூடும்

List of things that might get costlier in India amid tensions

சமையல் கேஸ், மண்எண்ணெய்

கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்தால்கூட, அது இந்தியாவில் உள்ள சாமானியரை நேரடியாகப்பாதிக்கும். கச்சா எண்ணெய் மூலம் பெட்ரோல், டீசல், எல்பிஜி, மண்எண்ணெய் போன்ற பொருட்கள் பிரித்து எடுக்கப்படும்போது, அதனுடைய விலைவாசி ஏற்றம் மற்ற பொருட்களின் மீதும் எதிரொலிக்கும். சமையல் கேஸ் இன்று நாட்டில் 90 சதவீத வீடுகளில் பயன்பாட்டுக்குவந்துவிட்டது,கிராமப்புறங்களில் மண்எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனிவரும் நாட்களில் அல்லதுவாரங்களில் இந்த இரு பொருட்களின் விலை உயரக்கூடும். நடுத்தர, சாமானிய மக்கள், இந்த இரு பொருட்களுக்காக அதிகமான அளவு செலவிட வேண்டியதிருக்கும்

Follow Us:
Download App:
  • android
  • ios