Asianet News TamilAsianet News Tamil

மதுபோதையில் பாலியல் பலாத்காரம்.. இதெல்லாம் சகஜம்தான்.. பொறுப்புள்ள அமைச்சர் பேசுற பேச்சை பாருங்க.!

ஒரு சில தாய்மார்கள் தங்கள் மகள்களை சரிவர வளர்க்காததால் தான் சில இடங்களில் தவறு நடக்கிறது. மதுபோதையில் பலாத்காரம் நடப்பது சகஜமான ஒன்றுதான் என்று கூறியுள்ளார். பொறுப்புள்ள அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு இப்படி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

It is normal to be raped under the influence of alcohol... minister Taneti Vanitha
Author
Andhra Pradesh, First Published May 5, 2022, 11:06 AM IST

ஒரு சில தாய்மார்கள் தங்கள் மகள்களை சரிவர வளர்க்காததால் தான் சில இடங்களில் தவறு நடக்கிறது என ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் தானேடி வனிதா கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலமான விஜயநகரம் ரிங் சாலை அருகே ஓடா காலனியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய தாய் விஜயநகரத்திலுள்ள டீக்கடையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு இளம்பெண்ணின் தாய் டீக்கடையில் பணிபுரிய சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட அதே பகுதியை சேர்ந்த போலீஸ்காரரின் மகன் செர்ரி (19) மதுபோதையில் வந்து அப்பெண்ணின் வீட்டில் கதவைத் தட்டினார். அப்போது இளம்பெண் கதவைத் திறந்தார். இதையடுத்து உள்ளே சென்ற செர்ரி, இளம்பெண்ணை சரமாரியாக தாக்கிதோடு, அவரை பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

It is normal to be raped under the influence of alcohol... minister Taneti Vanitha

இதுதொடர்பாக இளம்பெண் டீக்கடை உரிமையாளருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதனால், பதறிப்போன தாய் மற்றும் டீக்கடை உரிமையாளர் வீட்டிற்கு வந்து இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

It is normal to be raped under the influence of alcohol... minister Taneti Vanitha

இந்நிலையில், நேற்று குண்டூரில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் தானேடி வனிதா பங்கேற்றார். அப்போது அமைச்சரிடம் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் சம்பவம் அதிகரித்து வருவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் வனிதா;-  ஆண்கள் யாருக்கும் பெண்களை பலாத்காரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவர்கள் மது அருந்துவதால் அவர்களுடைய மனநிலை திடீரென வேறுபடுகிறது. அதனால்தான் அங்கங்கே பலாத்காரம் நடைபெற்று வருகிறது. ஒரு சில தாய்மார்கள் தங்கள் மகள்களை சரிவர வளர்க்காததால் தான் சில இடங்களில் தவறு நடக்கிறது. மதுபோதையில் பலாத்காரம் நடப்பது சகஜமான ஒன்றுதான் என்று கூறியுள்ளார். பொறுப்புள்ள அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு இப்படி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios