Asianet News TamilAsianet News Tamil

யாசின் மாலிக் விவகாரம் - இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா கடும் கண்டனம்..!

யாசின் மாலிக்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என தேசிய புலனாய்வு அமைப்பு வலியுறுத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

India Slams Islamic Nations Group's Remark On Yasin Malik
Author
India, First Published May 28, 2022, 12:09 PM IST

தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்து டெல்லி சிறப்பு  நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கண்டனம் தெரிவித்து இருந்தது. யாசின் மாலிக்கிற்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு கண்டனம் தெரிவித்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா பதிலடி கொடுத்து இருக்கிறது. 

2019 ஆண்டில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. விசாரணை நிறைவுற்ற நிலையில் யாசின் மாலிக் குற்றவாளி என டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

மரண தண்டனை:

மேலும் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது. மே 19 ஆம் தேதி யாசின் மாலிக்கிற்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டது. யாசின் மாலிக்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என தேசிய புலனாய்வு அமைப்பு வலியுறுத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

India Slams Islamic Nations Group's Remark On Yasin Malik

யாசின் மாலிக்கிற்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் மனித உரிமைகள் ஆணையம் விமர்சித்து இருந்தது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, யாசின் மாலிக்கின் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது என் தெரிவித்து இருக்கிறார்.

மறைமுக ஆதரவு:

“யாசின் மாலிக் வழக்கின் தீர்ப்பு குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் மனித உரிமைகள் ஆணையம் இந்தியாவை விமர்சித்து வெளியிட்ட கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று இந்தியா கருதுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு  யாசின் மாலிக்கின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மறைமுக ஆதரவு வெளிப்படுத்தி உள்ளது,” என்றும் அவர் தெரிவித்தார். 

பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத சூழலை தான் இந்த உலகம் விரும்புகிறது. பயங்கவாதத்தை எந்த வகையிலும்  இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு  நியாயப்படுத்த வேண்டாம் என்றும் அரிந்தம் பாக்சி தெரிவித்து இருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios