Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவில் மீண்டும் சாதனந்த தர்ம கொள்கைகள் - கேரளா ஆளுநர் கருத்தால் புது சர்ச்சை..!

பள்ளி திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் உமேஷ் பிரதாப் சிங், காவல் துறை கண்காணிப்பாளர் எஸ் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர் ஹரி பிரகாஷ் வர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

India Must Revive Sanatan Dharma Principles Kerala Governor Arif Khan
Author
India, First Published May 8, 2022, 11:13 AM IST

இந்தியாவின் பழைய கலாச்சார மரபுகள் மற்றும் சனாதன தர்ம கொள்கைகளை முறையான கல்வியின் மூலம் மீட்டெடுக்க வேண்டும் என்று கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்து இருக்கிறார். 

கேரளா ஆளுநர் மொகமுது ஆரிப் கான் உத்திர பிரதேச மாநிலத்தின் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கலான் நகரில் தனியார் பள்ளி திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த பள்ளி திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் உமேஷ் பிரதாப் சிங், காவல் துறை கண்காணிப்பாளர் எஸ் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர் ஹரி பிரகாஷ் வர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பள்ளி திறப்பு விழாவில் உரையாற்றிய கேரளா மாநில ஆளுநர் மொகமது ஆரிப் கான், இந்தியாவில் சனாதன தர்ம கொள்கைகளை மீட்டெடுப்பது குறித்து பேசினார். 

“நாட்டின் பழைய கலாச்சாரத்தை மீட்டெடுக்க அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும். காலக்கட்டத்தின் பின்னோக்கி செல்வதற்காக இல்லை, எனினும், சனாதன தர்ம கொள்கைகளை மீட்டெடுக்க வேண்டும். முறையான கல்வி இல்லாமல் இது சாத்தியமாகாது” என கேரளா ஆளுநர் மொகமது ஆரிப் கான் தெரிவித்தார். 

'மனித வாழ்க்கையின் நோக்கம் அறிவை அடைவது தான், பணிவு என்பது அறிவின் விளைவு. பணிவு உள்ள எவரையும் இழிவாகப் பார்க்க முடியாது’ என சுவாமி விவேகானந்தர் தெரிவித்து இருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios