விமானப்படையின் அப்பாச்சி ஹெலிகாப்டர் இன்று மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

ஹெலிகாப்டரில் ழில்நுட்பக் கோளாறைக் கண்டறிந்த விமானி, முன்னெச்சரிக்கையாக தரையிறக்க முடிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானியின் கவனத்துடன் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

"இந்திய விமானப்படையின் Apache AH-64 ஹெலிகாப்டர், வழக்கமான பயிற்சியின் போது, பிந்த் அருகே முன்னெச்சரிக்கையாக தரையிறங்கியது. அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். சரிபார்க்கும் குழு அந்த இடத்தை அடைந்துள்ளது" என்று இந்திய விமானப்படை தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

AH-64 Apache உலகின் அதிநவீன பல்வேறு தளங்களில் களமாடும் போர் ஹெலிகாப்டர் ஆகும். இந்திய விமானப்படையிடம் 22 AH-64E Apache ஹெலிகாப்டர்கள் உள்ளன, மேலும் 2020 ஆம் ஆண்டில், இந்திய ராணுவத்திற்கு மேலும் ஆறு Apache ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் போயிங் கையெழுத்திட்டது.

Scroll to load tweet…