Asianet News TamilAsianet News Tamil

விமானப் படையின் மிக் 21 ஜெட் விமானம் விபத்து: கிராமவாசிகள் இருவர் பலி!

இந்திய விமானப் படை தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற மிக் 21 ரக ஜெட் விமானம் ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

IAF's MiG-21 crashes in Rajasthan; two civilian killed Pilot escaped
Author
First Published May 8, 2023, 11:20 AM IST

ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தில் திங்கள்கிழமை இந்திய விமானப்படையின் மிக்-21 போர் விமானம் விபத்துக்கு உள்ளானதில் குறைந்தது இரண்டு கிராமவாசிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானி பாதுகாப்பாக இருப்பதாகவும், மீட்பு பணிக்காக ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூரத்கரில் இருந்து விமானம் புறப்பட்டுச் சென்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விமானம் ஹனுமன்கர் அருகே சென்றபோது டப்லி கிராமப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் குறைந்து 2 பெண்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பைலட் உயிர் தப்பியதாகவும், ஜெட்டில் பயணித்த இருவர் உயிர் இழந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு ராணுவம் விரைந்துள்ளது. சூரத்கர் என்ற இடத்தில் இருந்து ஜெட் விமானம் புறப்பட்டுள்ளது.

முன்னதாக ஜனவரி மாதம், ராஜஸ்தானின் பரத்பூரில் பயிற்சியின்போது இந்திய விமானப்படையின் இரண்டு போர் விமானங்கள் (Sukhoi Su-30 மற்றும் a Mirage 2000) விபத்துக்குள்ளானதில் ஒரு விமானி உயிரிழந்தார். ஒரு விமானம் மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் விழுந்து நொறுங்கிய நிலையில், மற்றொன்று ராஜஸ்தானின் பரத்பூரில் விழுந்து நொறுங்கியது.

கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. மற்றொரு விபத்து ஏப்ரல் மாதம் கொச்சியில் நடந்தது. கடலோர காவல்படை ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது விபத்து நேர்ந்தது. மார்ச் மாதம் மும்பையில் ஒரு கடற்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இரண்டு சம்பவங்கள் நடந்தன. அக்டோபர் 5, 2022 இல், அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு அருகே சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இந்திய ராணுவ விமானி ஒருவர் உயிரிழந்தார்.

மணிப்பூரில் இருப்பவர்களை மீட்க மாநில அரசுக்கு நடவடிக்கை; சிறப்பு விமானங்கள் ஏற்பாடு

Follow Us:
Download App:
  • android
  • ios