ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே எதிர்பாராதவிதமாக கோரமண்டல் விரைவு ரயில், யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயில், சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 233ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தேதார் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில் பிரதமர் மோடி இன்று ஒடிசா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் ரயில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், சுமார் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் சரிந்து அடுத்திருந்த ரயில் தடத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது வந்த அதிவிரைவு ரயிலான யஷ்வந்த்பூர் - ஹவுரா ரயில் கவிழ்ந்து கிடந்த கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது மோதியது. இதில் ஹவுரா ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு சரிந்தன. இந்த 2 பயணிகள் ரயிலுடன், மூன்றாவதாக வந்த சரக்கு ரயில் ஒன்றும் விபத்துக்குள்ளானது.
இதையும் படிங்க;- விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணித்தவர்கள் யார் யார்? பயணிகளின் முழு பட்டியல் வெளியானது

இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவத்தினரும் ஈடுபடுத்த உள்ளனர். 1999ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அளவில் மிக மோசமான மிக மோசமான ரயில் விபத்தாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க;- Coromandel Train Accident : இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்து : அடுக்கடுக்காக எழும் கேள்விகள்..

இந்நிலையில், ரயில் விபத்து குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மோடி இன்று ஒடிசா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலாஷோரில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பின், கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
