Asianet News TamilAsianet News Tamil

பாரத் ஜோடோ யாத்திரை செய்த மாயம்! ராகுல் காந்தி பயணித்த 20 தொகுதிகளில் 15ல் காங்கிரஸ் வெற்றி!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்ட கர்நாடகாவில் 20 தொகுதிகளில் 15ல் காங்கிரஸ் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

Congress Shares Direct Impact of Bharat Jodo Yatra in Karnataka Election Results
Author
First Published May 14, 2023, 1:27 PM IST

கர்நாடகாவில் அமோக வெற்றி பெற்றதையடுத்து உற்சாகமடைந்த காங்கிரஸ், ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையால் கட்சிக்கு எப்படி பலன் கிடைத்தது என்பதைக் காட்டும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்திதொடர்பாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளார்.

பாரத் ஜோடோ யாத்ரா என்று பெயரிடப்பட்ட இந்திய ஒற்றுமைப் பயணத்தின்போது ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தின் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்குச் சென்றுள்ளார். அந்தத் தொகுதிகளில் கட்சியின் தேர்தல் முடிவுகளை முன்வைத்து ஒரு அட்டவணையை ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ளார்.

கர்நாடக முதல்வர் யார்? கடினமான முடிவுவை எடுக்கும் பொறுப்பு கார்கே கையில்!

Congress Shares Direct Impact of Bharat Jodo Yatra in Karnataka Election Results

ட்விட்டரில் இந்த அட்டவணையப் பதிவிட்டுள்ள அவர், "இதுதான் கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்ராவின் நேரடி தாக்கம். கண்ணுக்கு தெரியாமல் செயல்பட்ட இந்தத் தாக்கம் கட்சியை ஒன்றிணைத்தது. தொண்டர்களை புத்துயிர் பெற்ற வைத்தது. கர்நாடக தேர்தலுக்கான கதையை வடிவமைத்தது. பாரத் ஜோடோ யாத்திரையின்போது, ராகுல் காந்தி கர்நாடக மக்கள் பலருடன் நடந்திய உரையாடல்களில் இருந்துதான்  எங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் உருவாக்கப்பட்டன" என்று தெரிவித்துள்ளார்.

2018 சட்டமன்றத் தேர்தலில் இந்த 20 இடங்களில் 5 இடங்களை வென்ற காங்கிரஸ், இந்தத் தேர்தலில் 15 இடங்களை வென்றுள்ளது. கடந்த முறை மொத்தமுள்ள 20 இடங்களில் 9 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக இந்த முறை 2 தொகுதிகளை மட்டுமே வென்றுள்ளது. 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 6 இடங்களில் வெற்றி பெற்ற ஜேடிஎஸ் இந்தத் தேர்தலில் 3 இடங்களை மட்டுமே பெற்றிருக்கிறது.

வெறும் 16 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பாஜக! ஜெயநகர் தொகுதியில் த்ரில் முடிவு!

Congress Shares Direct Impact of Bharat Jodo Yatra in Karnataka Election Results

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரையில் அவர் 12 மாநிலங்கள் வழியாக 146 நாட்கள் பயணித்தார். 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஆளும் பாஜக மீது அவநம்பிக்கை கொண்டவர்களின் ஆதரவை ஒன்றாகத் திரட்டுவதற்காக இந்த 3,500 கிமீ நடைபயணம் மேற்கொண்டார்.

Congress Shares Direct Impact of Bharat Jodo Yatra in Karnataka Election Results

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 42.9 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைவிட 4.86 சதவீதம் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. 135 தொகுதிகளில் வெற்றி அடைந்துள்ள காங்கிரஸ் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கத் தயாராகி வருகிறது.

கர்நாடகாவில் 43% வாக்குகளை வசப்படுத்திய காங்கிரஸ்! பரிதாப நிலையில் ஜேடிஎஸ்!

Follow Us:
Download App:
  • android
  • ios