Asianet News TamilAsianet News Tamil

பாங்காங் ஏரியில் சீனாவின் இரண்டாவது பாலம்.. செயற்கைக் கோள் புகைப்படங்களில் வெளியான பகீர் தகவல்..!

அசல் கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் ராணுவ தளவாடங்களை எளிதாக எடுத்து செல்வதற்காக மிகப்பொிய பாலம் ஒன்றை சீனா கட்டி வருகிறது. 

China Building New Larger Bridge Over Pangong Lake Satellite Pic Shows
Author
India, First Published May 19, 2022, 12:16 PM IST

கிழக்கு லடாக் பகுதியில் உள்ள பாங்காங் சோ ஏரியில் சீனா இரண்டாவது பாலத்தை கட்டமைத்து வருகிறது. இந்த பாலத்தை கொண்டு சீனா தனது ராணுவ தளவாடங்களை எளிதில் கொண்டுவர முடியும். சீனா கட்டி வரும் புது பாலம் பற்றிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 

கிழக்கு லடாக்கின் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்தியா மற்றும் சீனப்படைகள் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கில் 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி சீன படையினர் பயங்கர ஆயுதங்களை கொண்டு வந்து கொடூர தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதில் சீன படையினருக்கும் பெருத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டது.

சீனா பாலம்:

இதை அடுத்து 2020 ஆண்டின் ஆகஸ்ட் மாத வாக்கில் பாங்காங் ஏாியின் தெற்கு பகுதியை இந்திய ராணுவம் அதிரிடியாக கைப்பற்றியது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் தனது கட்டமைப்பை பலப்படுத்த சீனா முயற்சி செய்து வருகிறது. லடாக்கின் பாங்காங் ஏரி பகுதியில் கடந்த ஜனவாி மாதம் பாலம் ஒன்றை சீன ராணுவம் கட்டியது. இதற்கு மத்திய அரசு தரப்பில் கடும் எதிா்ப்பு தொிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், லடாக் கிழக்குப் பகுதியில் உள்ள பாங்காங் ஏரி பகுதியில் சீன ராணுவம் இரண்டாவது பாலத்தை கட்டி வருவது செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியா சீனா எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இருந்து 20 கிலோமீட்டா் தொலைவில் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து புவியியல் நுண்ணறிவு ஆராய்ச்சியாளா் டாமியன் சைமன் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், அசல் கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் ராணுவ தளவாடங்களை எளிதாக எடுத்து செல்வதற்காக மிகப்பொிய பாலம் ஒன்றை சீனா கட்டி வருகிறது. இதனை செயற்கைக்கோள் புகைப்படம் உறுதிப்படுத்தி இருக்கிறது. பாலத்தின் இரண்டு புறமும் ஒரே நேரத்தில் கட்டப்பட்டு வருகிறது. 

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிகளில் இந்தியா தரப்பிலும் பாலங்கள், சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் ராணுவ தளவாடங்களை விரைந்து கொண்டு செல்ல முடியும். இதே பகுதியில் சீனா ஏற்கனவே தனது முதல் பாலத்தை கட்டி முடித்து விட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios