Asianet News TamilAsianet News Tamil

30 ஆண்டுகளாக நடத்தப்படாத விழா..காஷ்மீர் இந்து கோவிலில் வழிபட்ட முஸ்லீம் போலீஸ் அதிகாரி - நெகிழ்ச்சி சம்பவம்

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு ரெஜென்யா மாதா அஸ்தபன் கோயிலில் யாகம் நடத்தப்பட்டது.

Budgam DC Muslim police Hamid joins maha yagya in Kashmir temple
Author
First Published Apr 30, 2023, 11:20 AM IST

காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் இந்து பண்டிட் சமூகம் ஏற்பாடு செய்திருந்த மகா யாகத்தில் ஒரு முஸ்லீம் அதிகாரி கலந்துகொண்டார். 30 ஆண்டுகளுக்கு பிறகு புத்காம் மாவட்டத்தில் உள்ள ரெஜென்யா மாதா அஸ்தபன் கோயிலில் யாகம் நடத்தப்பட்டது.

இதில் புத்காம் துணை ஆணையர் எஸ்.எஃப்.ஹமீத் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய எஸ்.எப்.ஹமீத், காஷ்மீரில் உள்ள மத ஒற்றுமைக்கும், சகோதரத்துவத்துக்கும் இந்து, முஸ்லீம் ஆகிய இரு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்பது ஒரு சான்றாகும்” என்று கூறினார். எஸ்.எப்.ஹமீத் 2017 ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

Budgam DC Muslim police Hamid joins maha yagya in Kashmir temple

அவர் அஸ்ஸாம் மற்றும் மேகாலயா கேடரைச் சேர்ந்தவர். தற்போது அவர் தனது சொந்த மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். விழாவை சுமூகமாக நடத்த, பக்தர்களின் வசதிக்காக உரிய ஏற்பாடுகளை செய்ய மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். யாகத்தில் பங்கேற்ற ஒரு காஷ்மீரி பண்டிட், பண்டிட் சமூகத்தின் சார்பாக துணை ஆணையருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க..மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை.. முழு விபரம்.!!

Budgam DC Muslim police Hamid joins maha yagya in Kashmir temple

"இந்த விழா சிறப்பாக நடைபெறுவதற்கு உதவியதற்காக ஹமித்ஜிக்கு நாங்கள் முழு மனதுடன் நன்றி கூறுகிறோம். 1989 க்குப் பிறகு கோவிலில் ஹவானை நடத்துவது இதுவே முதல் முறை. ஹவானின் போது ஹமீத் பக்தர்களுடன் சுதந்திரமாக கலந்து கொண்டார். இத்தகைய சைகைகள் காஷ்மீரில் மத நல்லிணக்கம் வழக்கமான அம்சமாக மாறும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க..பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா.! அடேங்கப்பா.!!

Follow Us:
Download App:
  • android
  • ios