Asianet News TamilAsianet News Tamil

கான்பூர் வன்முறை விவகாரம்... நபிகள் குறித்து சர்ச்சை பதிவிட்ட பா.ஜ.க. தலைவர் அதிரடி கைது..!

இந்த விவகாரம் தொடர்பாக ஞாயிற்றுக் கிழமை அன்று நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிந்தால் ஆகியோர் பா.ஜ.க.-வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். 

BJP Leader Arrested For Comments On Prophet 4 Days After Kanpur Clashes
Author
Kanpur, First Published Jun 8, 2022, 10:41 AM IST

முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்ட பா.ஜ.க. தலைவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். உத்திர பிரதேச மாநிலத்தின் கான்பூர் பகுதியில் ஏற்பட்ட வன்முறை வெடித்ததை அடுத்து, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

பா.ஜ.க. யூத் விங் பிரிவை சேர்ந்த ஹர்சித் ஸ்ரீவத்சவா தனது வன்மையான ட்விட்டர் பதிவுகளால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தியதை அடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர். கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சர்ச்சை ட்விட்கள் அழிக்கப்பட்டன.

கான்பூர் வன்முறை:

ஞானவாபி விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. வை சேர்ந்த நுபுர் ஷர்மா முகமது நபிகள் குறித்து தொலைகாட்சி விவாதத்தில் சர்ச்சைக் குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் வெள்ளிக் கிழமை மதிய வேளையில் தொழுகையை முடித்த பின் கான்பூர் பகுதியில் முஸ்லீம்கள் போராட்டம் மற்றும் ஊர்வலம் நடத்த முயன்றனர். அப்போது இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. 

BJP Leader Arrested For Comments On Prophet 4 Days After Kanpur Clashes

இந்த விவகாரம் தொடர்பாக ஞாயிற்றுக் கிழமை அன்று நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிந்தால் ஆகியோர் பா.ஜ.க.-வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இவர்களின் கருத்துக்களுக்கு உலகின் 16 நாடுகள் கடம் கண்டனம் தெரிவித்தன. கான்பூர் வன்முறை தொடர்பாக கான்பூர் போலீசார் தொடர் விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

வழக்குப் பதிவு:

அந்த வகையில் திங்கள் கிழமை அன்று 40 பேரின் புகைப்படங்களை கான்பூர் காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த புகைப்படங்கள் அனைத்தும் சம்பத்தின் போது எடுக்கப்பட்ட பல்வேறு வீடியோக்களில் இருந்து எடுக்க சி.சி.டி.வி. மற்றும் மொபைல் போன்களில் இருந்து உருவாக்கப்பட்டு உள்ளது.

இதுவரை 50 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு, சுமார் 1500 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வன்முறையில் 40-க்கும் அதிகமானோர் காயமுற்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios