Asianet News TamilAsianet News Tamil

Kerala : கேரளாவில் இன்று ஒரே நாளில் பணி ஓய்வு பெறும் 11,800 அரசு ஊழியர்கள்!

ஆசிரியர்கள் உட்பட சுமார் 11,800 அரசுத் துறை ஊழியர்கள் இன்று பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளனர்.
 

11800 government employees retire today in Kerala!
Author
First Published May 31, 2023, 11:01 AM IST

கேரள மாநிலத்தில், கடந்த 2022 மற்றும் 2021 ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை முறையே 11,100 மற்றும் 9,205 ஆக இருந்தது. இந்த ஆண்டு, அதாவது மே 31, 2023 இன்று மட்டும் சுமார் 11 ஆயிரத்து 800 பேர் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். பள்ளி நுழைவு ஆவணத்தில் பிறந்த தேதியை மே 31 என்று குறிப்பிடும் பழைய நடைமுறையே ஒரே நாளில் ஏராளமானோர் ஓய்வு பெறுவதற்குக் காரணம் என கூறப்படுகிறது.

பதினோராவது ஊதியத் திருத்தக் குழு அறிக்கையின்படி, இந்த ஆண்டு கேரள மாநிலத்தில் 21,063 நபர்கள் ஓய்வு பெற உள்ளனர். இந்த குறிப்பிடத்தக்க எண்ணிக்கை என்பது, மொத்த ஓய்வூதியக் குழுவில் உள்ள, ஏறக்குறைய பாதிப் பேர் இன்று அவர்களது பணி வாழ்க்கையிலிருந்து விடைபெறுவார்கள் என்பதைக் குறிக்கிறது.
வருடாந்திர ஓய்வூதிய சராசரி 20,000 ஆகும். அரசாங்கத் தரவுகளின்படி, 2027 ஆம் ஆண்டில் சராசரியை விட அதிகமான ஓய்வூதியங்களை மாநிலங்களுக்கு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது, அதாவது 23,714 நபர்களக்கு ஓய்வூதிய பலன்களை கொடுக்க வேண்டி இருக்கும்.

ஓய்வு பெறுபவர்கள் அனைவரும், ஓய்வூதிய பலன்களைப் பெற தகுதியுடையவர்கள். இதற்கான மதிப்பீடு சுமார் 3,000 கோடி ரூபாய். ஆனால், ஒரேயடியாகத் தொகையை விடுவிக்க அரசுக்கு சாத்தியமில்லை. கணக்காளர் ஜெனரலின் ஒப்புதலின் அடிப்படையில் நன்மைகள் வழங்கப்படுகின்றன.

ஓய்வூதிய பலன்கள் குறித்து பேசியுள்ள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால், சலுகைகளை வழங்குவதற்கு வழக்கமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios