MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • மிதுனத்தில் சூரியன் பெயர்ச்சி: இந்த 4 ராசியினருக்கு அதிர்ஷ்டம், பண ஆதாயம் கிடைக்கும்...!

மிதுனத்தில் சூரியன் பெயர்ச்சி: இந்த 4 ராசியினருக்கு அதிர்ஷ்டம், பண ஆதாயம் கிடைக்கும்...!

 Suriya Peyarchi 2023: சூரியபகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சி செய்யும்போது  4 ராசிகளை சேர்ந்தவர்களின் அதிர்ஷ்டம்  பிரகாசிக்கவுள்ளது. 

2 Min read
maria pani
Published : Jun 01 2023, 11:51 AM IST| Updated : Jun 01 2023, 11:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஜோதிட சாஸ்திரங்களின்படி, ஒவ்வொரு கிரகமும் தனது இடத்தைத் குறிப்பிட்ட காலத்தில் மாற்றுகிறது. சூரிய பகவான் ஓர் ஆண்டிற்கு பின்னர் மிதுன ராசிக்கு செல்கிறார். இந்த சூரியனின் பெயர்ச்சி ஓராண்டிற்கு பின்னர் நடைபெறுகிறது. வருகிற ஜூன் 15 ஆம் தேதி மாலை 06.29 மணியில் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.  மிதுனத்தில் 32 நாள்கள் சஞ்சாரம் செய்த பின்னர் சூரியன் மீண்டும் தனது ராசியை மாற்றுவார். அதனால் பலன் பெறும் ராசிகளை இங்கு காணலாம். 

25

மேஷம்

மிதுன ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவது மேஷ ராசியினருக்கு நல்ல பலன்களை தரும். இந்த காலகட்டத்தில் உங்களுடைய தைரியமும், வலிமையும் பெருகும். ஆளுமை சிறப்பாக மாறும். பணக்கஷ்டம் குறையும். நிதி நிலைமை வலுவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு அரசிடமிருந்து சில உதவிகள் கிடைக்கும்.

35

சிம்மம் 

சிம்ம ராசியின் அதிபதி சூரியன் இவர் மிதுன ராசியில் சஞ்சாரம் செய்வதால் உங்களுடைய மரியாதை பன்மடங்கு பெருகும். இந்த காலகட்டத்தில் செல்வாக்கு மிகுந்த ஆட்களின் அறிமுகம் கிடைக்கலாம். நீங்கள் செய்யும் வேலையில் வெற்றி கிடைக்கும்.  குடும்பத்தில் சமாதானம் நிலவும்.  குடும்பம் முன்னேற்றம் அடையும். காதல் வாழ்க்கையில் சில இடையூறுகள் ஏற்படலாம். நீங்கள் அதை சரி செய்ய முயற்சி செய்வீர்கள். 

45

கன்னி 

மிதுன ராசியில் சூரியனின் பெயர்ச்சி உங்களுக்கு வேலைகளில் வெற்றியை வாரி கொடுக்கும். ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூலை 17ஆம் தேதி வரை உங்களுடைய வேலை அல்லது வியாபாரம் நன்றாக நடைபெறும் காலமாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் அல்லது பெரிய நிறுவனத்தில் வேலைக்கு செய்யும் வாய்ப்பு கிடைக்கலாம்.  உங்களுடைய பணிக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.  வேலையில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த பெயர்ச் சி சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். 

55

கும்பம்

மிதுன ராசியில் சூரியனின் பெயர்ச்சி, கும்பத்திற்கு உகந்தது.   இந்த நேரத்தில், புதிய வேலைகளில் கவனம் செலுத்தலாம். அதில் நீங்கள் வெற்றியும் பெறலாம். கல்விப் போட்டியில் தொடர்புள்ளவர்கள் கவனமாகவும் கடினமாகவும் உழைக்க வேண்டும். இந்த பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். பொருளாதாரம் வலுவடையும். வியாபாரம் முன்னேற்றம் காணும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

இதையும் படிங்க: புதன் பெயர்ச்சி 2023: இந்த 3 ராசிகளுக்கும் இனி பணமழைதான்! சொந்த வாகனம் வாங்கும் யோகம் யாருக்கு??

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
பீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!
Recommended image2
Spiritual: நொடியில் ஓடி மறையும் கடன் தொல்லை.! கோடீஸ்வர யோகத்தை தரும் பரிகாரங்கள்.!
Recommended image3
Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved