MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • அட்சய திருதியை 2023: எந்த நேரத்தில் தங்கம், வெள்ளி வாங்கினால், நம் வீட்டில் செல்வம் குவியும் தெரியுமா?

அட்சய திருதியை 2023: எந்த நேரத்தில் தங்கம், வெள்ளி வாங்கினால், நம் வீட்டில் செல்வம் குவியும் தெரியுமா?

Akshaya Tritiya 2023: அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது எதிர்காலத்தில் செழிப்பையும், செல்வத்தையும் தரும் என்பது ஐதீகம். இந்த வருடம் அட்சய திருதியை எப்போது? தங்கம் வாங்க சிறந்த நேரம் எது? என்பதை இங்கு காணலாம்.  

2 Min read
Author : maria pani
Published : Apr 06 2023, 11:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Akshaya Tritiya 2023 Date and Time: இந்துக்கள் அட்சய திருதியை பண்டிகையை வைஷாக மாதத்தில் சுக்ல பக்ஷத்தின் 14ஆவது நாளில் கொண்டாடுகிறார்கள். இந்த நாள் ஆண்டின் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது. சமஸ்கிருதத்தில் அட்சயா என்றால் 'நித்தியமான, முடிவில்லாதது' எனவும், திருதியா என்றால் 'மூன்றாவது' எனவும் அர்த்தம். 

25

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது எதிர்காலத்தில் செழிப்பையும் செல்வத்தையும் தரும் என்று நம்பி பலர் அன்றைய தினம் தங்கம் வாங்குகிறார்கள். இந்நாளில் பக்தர்கள் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு பூஜை செய்வார்கள். இந்த நாளில் மகா லட்சுமி, விஷ்ணு வழிபாடு சிறந்தது. மகாவிஷ்ணுவுக்கு தூபம், சந்தனம், துளசி, மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு பூஜை செய்து, மஞ்சள் வஸ்திரங்களைச் சமர்பிக்க வேண்டும். 

35

அட்சய திருதியை 2023 தேதி: 

நல்ல அதிர்ஷ்டத்தை வழங்கும் அட்சய திருதியை நாள், இந்தாண்டு ஏப்ரல் 22ஆம் தேதி வருகிறது. 

பூஜை நேரங்கள்: ஏப்ரல் 22ஆம் தேதி அன்று காலை 07:49 முதல் மதியம் 12:20 வரை வழிபடலாம். 

தங்கம் வாங்குவதற்கான நல்ல நேரம்: ஏப்ரல் 22ஆம் தேதி (சனி) காலை 7:49 AM முதல் ஏப்ரல் 22ஆம் தேதி ஞாயிறு, காலை 7:47 AM மணி வரையிலும் வாங்கலாம். 

45

அட்சய திருதியை முக்கியத்துவம்! 

பிரம்மன் உலகை உருவாக்கிய நாள் அட்சய திரிதியை நாள் என்கிறது சாஸ்திரங்கள். அதனால் அட்சய திருதியை நாளில் ஒருவர் பல சுப காரியங்களைச் செய்யலாம். இந்த நாளில் கங்கையில் நீராடுவது ரொம்ப மகிமை வாய்ந்தது. இந்நாளில் கங்கையில் ஸ்நானம் செய்பவர் எல்லா எதிர்மறை ஆற்றலில் இருந்தும் விடுபடுகிறார். பார்லி, கோதுமை, பருப்பு, தயிர் சோறு, பால் ஆகியவற்றை முன்னோர்களின் பெயரில் தானம் செய்யுங்கள். இந்த நாளில் தங்கம் வாங்குவது நல்லது. வாங்க முடியாதவர்கள் பச்சரிசி, வெல்லம் போன்றவை வாங்கலாம். 

இதையும் படிங்க: உங்க கையில் பணம் சேர! இந்த 7 பொருட்களை வீட்டில் வாங்கி வையுங்கள்! அதிர்ஷ்டம் தேடி வரும்..

55

அட்சய திருதியை விரதம், பூஜை! 

இந்நாளில் விரதம் இருப்பவர்கள் காலை எழுந்து நீராடி விட்டு மஞ்சள் ஆடை அணிய வேண்டும்.  விஷ்ணுவின் சிலை அல்லது படத்தை வைத்து துளசி, மஞ்சள் மலர் மாலை அல்லது மஞ்சள் பூக்களை சாற்றவும்.தீப, தூப, ஆராதனை செய்ய வேண்டும். விஷ்ணுவுக்கு நெய் தீபம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும். மஞ்சள் நிற ஆசனத்தில் அமரவும். விஷ்ணு சஹஸ்ரநாமம், விஷ்ணு சாலிசா ஆகிய விஷ்ணு தொடர்பான ஸ்தோத்திரங்களை உச்சரிக்க வேண்டும். நிச்சயம் இந்த வழிபாடு உங்களுக்கு நல்ல பலன்களை வாரி வழங்கும். 

இதையும் படிங்க: அட்சயதிரிதியை 2023: இந்த நாளில் தங்கம் வாங்க முடியாதவர்கள் என்ன வாங்கணும் தெரியுமா?

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Recommended image1
வறுமை நீங்கி வளம் தரும் லட்சுமி குபேர பூஜை: முழுமையான வழிபாட்டு முறைகள்!
Recommended image2
12 நாட்களில் 7 புண்ணியத் தலங்கள்! IRCTC வழங்கும் மெகா ஜியோதிர்லிங்க யாத்திரை
Recommended image3
குரு பகவானுக்கு பிடித்தமான அதிர்ஷ்ட ராசிகள்.! கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.! சொத்துக்கள் குவியும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved